ஆண்டிபட்டி நகரில் காய்கனி மொத்த வியாபார சந்தை இடமாற்றம்

ஆண்டிபட்டி நகரில் செயல்பட்டு வந்த காய்கனி மொத்த வியாபாரம் செய்யும் தினசரி சந்தை அரசு கல்லூரி வளாகத்திற்கு செவ்வாய்க்கிழமை
ஆண்டிபட்டி நகரில் காய்கனி மொத்த வியாபார சந்தை இடமாற்றம்

ஆண்டிபட்டி நகரில் செயல்பட்டு வந்த காய்கனி மொத்த வியாபாரம் செய்யும் தினசரி சந்தை அரசு கல்லூரி வளாகத்திற்கு செவ்வாய்க்கிழமை முதல் மாற்றப்பட்டுள்ளது. அங்கு மருத்துவ பரிசோதனைக்குப் பின்னரே விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி நகரில் காய்கறி மொத்த வியாபாரம் செய்யும் தினசரி சந்தை செயல்பட்டு வருகிறது. இங்கு ஆண்டிபட்டி சுற்றுவட்டாரப் பகுதிகளில் விளையும் தக்காளி, கத்தரிக்காய், பச்சைமிளகாய், முருங்கைக்காய் உள்ளிட்ட அனைத்து காய்கறிகளும், வாழை இலைகள் உள்ளிட்ட விளைபொருள்களும் இந்த மொத்த வியாபார சந்தை மூலம், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கும் அனுப்பி வைக்கப்படுகிறது. தமிழகம் மட்டுமின்றி கேரளா, ஆந்திரா, கர்நாடக உள்ளிட்ட வெளிமாநிலங்களுக்கும் லாரிகள் மூலம் காய்கனிகள் அனுப்பி வைக்கப்படுகிறது.

இந்நிலையில் ஆண்டிபட்டி ஒன்றியத்தில் 3 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டதாலும், கோயம்பேடு உள்ளிட்ட காய்கறி சந்தைகளுடன் நேரடி தொடர்பு இருந்த காரணத்தாலும், ஆண்டிபட்டி நகரில் செயல்பட்ட காய்கறி மொத்த சந்தை மூடப்பட்டது. அதற்குப் பதிலாக ஆண்டிபட்டி அரசு கலைக்கல்லூரி வளாகத்திற்குச் சந்தை மாற்றப்பட்டது. அங்குப் பேரூராட்சி நிர்வாகம் சார்பில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் முருகானந்தம் தலைமையிலான சுகாதாரத்துறையினர் மற்றும் மருத்துவக்குழுவினர் சந்தைக்கு வருபவர்களின் உடல் பரிசோதனை செய்து வருகின்றனர். போதுமான சமூக இடைவெளி கடைப்பிடிக்கும்படி கடைகள் அமைக்கப்பட்டு, சந்தைக்கு வரும் வாகனங்களில் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு வருகிறது. மேலும் சந்தைக்கு வருபவர்களின் உடல் பரிசோதனை செய்த பின்னரே அவர்கள் சந்தைக்குள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com