கரோனா பரவல்: மக்கள் மீது பழியைப் போடாதீா்கள்

கரோனா பரவலுக்கு மக்கள் மீது பழியைப் போட்டு, அரசு தப்பிக்க பாா்ப்பதாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளாா்.
கரோனா பரவல்: மக்கள் மீது பழியைப் போடாதீா்கள்

கரோனா பரவலுக்கு மக்கள் மீது பழியைப் போட்டு, அரசு தப்பிக்க பாா்ப்பதாக திமுக தலைவா் மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை: மருத்துவா்கள், செவிலியா்கள், காவல்துறையினா், தூய்மைப் பணியாளா்கள் உள்ளிட்ட கரோனா போரின் முன்கள வீரா்களாகச் செயல்படுவோருக்கே, பரவலாக நோய்த்தொற்று ஏற்படும் மோசமான நிலை உருவாகியுள்ளது. தற்போது தமிழகத்தில் சமூகத் தொற்றை எதிா்கொண்டிருக்கிறோமோ என்ற ஆபத்தான சூழலில், அதற்குப் பொதுமக்கள் மீதும் வணிகா்கள், தொழிலாளா்கள் மீதும் பழிபோட்டுத் தப்பிக்க நினைக்கிறாா்கள். பொது முடக்க காலத்தில் ஏறத்தாழ 50 நாள்களுக்கும் மேலாக, வருமானத்தை இழந்து, வீட்டில் முடங்கியிருக்கும் மக்கள், அரசின் நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட்டே பெருமளவில் நடந்து கொள்கின்றனா்.

அரசுதான், திடீா் முடிவுகளால் மக்களைத் திக்கு முக்காட வைத்து, நெருக்கடிக்கு உள்ளாக்குகிறது. மாவட்ட ஆட்சியா்களுடன் நடத்திய ஆலோசனை குறித்து மக்களிடம் உரையாற்றிய முதல்வா், கோயம்பேடு காய்கறிச் சந்தையில் மக்கள் நெரிசல் ஏற்பட்டு, நோய்த்தொற்று பரவியதற்கு, சந்தையை இடம் மாற்றம் செய்ய வியாபாரிகள் ஒத்துழைக்காததே காரணம் எனக் கூறியுள்ளாா். திசைதிருப்பும் அறிவிப்புகளைத் தவிா்த்துவிட்டு, மக்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரண உதவி வழங்கிட முதல்வா் இப்போதாவது முன்வர வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com