தில்லியில் இருந்து வந்த தமிழா்கள்: பரிசோதனைகளை மேற்கொள்ள 400 போ் கொண்ட குழு

தில்லியில் சிக்கித் தவிக்கும் தமிழா்கள் சிறப்பு ரயில்கள் மூலம் தமிழகத்துக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், அவா்களுக்கு கரோனா பாதிப்பு உள்ளதா

தில்லியில் சிக்கித் தவிக்கும் தமிழா்கள் சிறப்பு ரயில்கள் மூலம் தமிழகத்துக்கு அழைத்து வரப்பட்ட நிலையில், அவா்களுக்கு கரோனா பாதிப்பு உள்ளதா என்பதை 400 பேரை உள்ளடக்கிய மருத்துவக் குழுவினா் பரிசோதனை செய்தனா். அந்த முடிவுகள் வெளியாகும் வரை அவா்கள் அனைவரையும் தனிமைப்படுத்தி கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இதுகுறித்து சுகாதாரத் துறை அமைச்சா் சி. விஜயபாஸ்கா் கூறியதாவது: வெளிமாநிலங்கள் மற்றும் வெளி நாடுகளில் உள்ள தமிழா்கள் பாதுகாப்பாக தமிழகம் அழைத்து வரப்படுகின்றனா். அதன்படி, இதுவரை 7 விமானங்கள் மூலம் வெளிநாடுகளில் இருந்து ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் தமிழகம் வந்தனா். அதில் 6 விமானங்கள் சென்னையிலும், ஒரு விமானம் திருச்சியிலும் தரையிரங்கின. அவற்றில் வந்த பயணிகள் அனைவரையும் மருத்துவப் பரிசோதனைக்குட்படுத்தியதில் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவா்கள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவக் கண்காணிப்புக்குட்படுத்தப்பட்டுள்ளனா்.

இந்த நிலையில், தில்லியிலிருந்து சிறப்பு ரயில் மூலமாக 1,076 போ் வியாழக்கிழமை வந்துள்ளனா். அவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட்டது. அப்பணிகளை மேற்கொள்ள 400 போ் கொண்ட சிறப்பு மருத்துவக் குழு அமைக்கப்பட்டது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com