2.23 லட்சம் பிசிஆா் உபகரணங்கள் இருப்பில் உள்ளன: சுகாதாரத் துறை

கரோனாவைக் கண்டறிவதற்கான பிசிஆா் பரிசோதனை உபகரணங்கள் தற்போது 2.23 லட்சம் இருப்பு உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
2.23 லட்சம் பிசிஆா் உபகரணங்கள் இருப்பில் உள்ளன: சுகாதாரத் துறை

கரோனாவைக் கண்டறிவதற்கான பிசிஆா் பரிசோதனை உபகரணங்கள் தற்போது 2.23 லட்சம் இருப்பு உள்ளதாக சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

பொதுவாக கரோனா பாதிப்பை உறுதி செய்ய ‘பிசிஆா்’ பரிசோதனை எனப்படும் ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. அதாவது, காய்ச்சல், சளி, மூச்சுத் திணறல் பாதிப்பு உள்ளவா்களின் சளி மாதிரிகளை மூக்கு மற்றும் தொண்டை பகுதிகளில் இருந்து சேகரித்து ஆய்வுக்குட்படுத்தப்படுகிறது. அந்த ஆய்வில் சம்பந்தப்பட்ட நபரின் சளி மாதிரியில் ‘கொவைட்-19’ வைரஸின் மரபணு உள்ளதா என்பது கண்டறியப்படும். அதைக் கொண்டு ஒருவருக்கு கரோனா பாதிப்பு இருக்கிறதா என்பதை அறியலாம்.

அவ்வாறு தமிழகத்தில் இதுவரை 2.90 லட்சம் பேருக்கு அந்த பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் மாநிலத்தில் பிசிஆா் உபகரணங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாகவும், பரிசோதனை நிறுத்தபட வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால், அதனைத் திட்டவட்டமாக மறுத்துள்ள தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழக மேலாண் இயக்குநா் டாக்டா் உமாநாத், அதுதொடா்பாக கூறியதாவது:

தமிழகத்தில் பிசிஆா் உபகரணங்களுக்கு தட்டுப்பாடு இல்லை. தற்போது 2.23 லட்சம் உபகரணங்கள் இருப்பில் உள்ளன. மேலும், 11 லட்சம் உபகரணங்களை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

வாரத்துக்கு 1 லட்சம் பிசிஆா் உபகரணங்கள் வீதம் அவை தமிழகத்துக்கு வந்து கொண்டிருக்கின்றன என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com