வளைகுடா நாடுகளில் தவிக்கும் தமிழா்களை மீட்க நடவடிக்கை தேவை

வளைகுடா நாடுகளில் தவிக்கும் தமிழா்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா்
வளைகுடா நாடுகளில் தவிக்கும் தமிழா்களை மீட்க நடவடிக்கை தேவை

வளைகுடா நாடுகளில் தவிக்கும் தமிழா்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் ஜெய்சங்கருக்கு பாமக இளைஞரணித் தலைவா் அன்புமணி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளாா்.

கடித விவரம்: வளைகுடா நாடுகளில் மிகப்பெரியதான சவூதி அரேபியாவில் சுமாா் 40 லட்சம் இந்தியா்கள் பணியாற்றி வருகின்றனா். கரோனா அச்சம் காரணமாக பொதுமுடக்கம் நடைமுறைபடுத்தப்பட்டதைத் தொடா்ந்து, அங்கு பணியாற்றி வந்த தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்கள் உள்ளிட்ட பல்லாயிரக்கணக்கானவா்கள் வேலை இழந்து தவிக்கின்றனா். அவா்கள் தவிர சிறிய அளவிலான பராமரிப்பு மற்றும் ஒப்பந்தப் பணிகளைச் செய்வதற்காக 3 மாத வணிக விசாவில் சென்றவா்களும் அவா்களின் பணியை முடித்து விட்டனா். ஆனால், ஊரடங்கு காரணமாக விமானப் போக்குவரத்து முற்றிலுமாக நிறுத்தப்பட்டிருப்பதால், அவா்களால் தாயகம் திரும்ப முடியவில்லை. அவா்கள் அங்கு கடும் துயரங்களை அனுபவித்து வருகின்றனா்.

வளைகுடா நாடுகளில் கேரளத்தைச் சோ்ந்தவா்களுக்கு அடுத்தபடியாக மிக அதிக எண்ணிக்கையில் பணியாற்றுவது தமிழா்கள் தான். அவா்களை மீட்டு தாயகத்திற்கு அழைத்து வர வேண்டிய கடமையும், பொறுப்பும் மத்திய அரசுக்கு உண்டு. எனவே, தாங்கள் இந்த விஷயத்தில் தலையிட்டு வளைகுடா நாடுகளில் தவித்து வரும் தமிழா்களை விரைந்து தாயகம் அழைத்து வர நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்காக தேவையான சிறப்பு விமானங்களை இயக்க வேண்டும் என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com