வடமாநிலத்தைச் சேர்ந்த 1,400 புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு

தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து தனி ரயில் மூலம் தூத்துக்குடி நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 1,400 பேர் பிகார் மாநிலத்திற்குப் பயணம் மேற்கொண்டனர். 
வடமாநிலத்தைச் சேர்ந்த 1,400 புலம்பெயர் தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பு

தூத்துக்குடி மாவட்டத்திலிருந்து தனி ரயில் மூலம் தூத்துக்குடி நெல்லை, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த 1,400 பேர் பிகார் மாநிலத்திற்குப் பயணம் மேற்கொண்டனர். 

வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி உள்ளிட்ட மாவட்டங்களில் ஏராளமானோர் கூலி வேலை செய்து வருகின்றனர். இவர்கள் இந்த ஊரடங்கு உத்தரவு காரணமாக வேலை இல்லாததால் மிகவும் பாதிக்கப்பட்டனர் இவர்கள் தங்கள் சொந்த ஊருக்குச் செல்ல வேண்டும் என மாவட்ட நிர்வாகத்திடம் விருப்பம் தெரிவித்தனர். 

இதன்படி தூத்துக்குடியைச் சேர்ந்த 1000 பேர் நெல்லை தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த 400 பேர் என 1400 பேரைத் தனி ரயில் மூலம் பிகார் மாநிலத்திற்கு அனுப்ப முடிவு செய்யப்பட்டது. அதன்படி தூத்துக்குடி ரயில் நிலையத்திலிருந்து சிறப்பு ரயில் மூலம் அனுப்பி வைக்கப்படுகின்றனர். அதற்காக நெல்லை தென்காசி மாவட்டங்களிலிருந்து அரசு பேருந்து மூலம் தூத்துக்குடி ரயில் நிலையம் அழைத்து வரப்பட்டு அவர்களுக்கு உரியப் பரிசோதனை செய்த பிறகு அவர்களுக்கு உணவு குடிநீர் மற்றும் டிக்கெட் வழங்கப்பட்டு வரிசையாக ரயிலில் ஏற அனுமதித்தனர். இந்தப் பணியை தூத்துக்குடி மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி காவல் கண்காணிப்பாளர் அருண் பாலகோபாலன் மாநகராட்சி ஆணையர் ஜெயசீலன் ஆகியோர் பார்வையிட்டு இவர்களைப் பிகார் மாநிலத்திற்கு அனுப்பி வைத்தனர். 

இதைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித் தலைவர் சந்தீப் நந்தூரி செய்தியாளர்களிடம் பேசும்போது..

தூத்துக்குடி மாவட்டத்தில் வெளி மாநிலத்தைச் சேர்ந்த சுமார் 8000 பேர் வேலை செய்து வருவதாகவும் அதில் 4,000 பேர் சொந்த ஊருக்குப் போக விருப்பம் தெரிவித்தார். முதற்கட்டமாக 500 பேர் அனுப்பி வைக்கப்பட்டுள்ள நிலையில், இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் வேலை செய்து வந்த ஆயிரம் பேரும் நெல்லை தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த 400 பேரின் 1,400 பேர் இந்த சிறப்பு ரயில் மூலம் பிகார் மாநிலம் அனுப்பி வைக்கப்படுகிறது. 

தொடர்ந்து அவர்களை அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இவர்களுக்குத் தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் மாவட்ட நிர்வாகம் சார்பில் சிறப்பாகச் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com