புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பு

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி பொன்னேரி வட்டாட்சியர்
புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைப்பு

புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் பணி பொன்னேரி வட்டாட்சியர் மணிகண்டன், வருவாய் ஆய்வாளர் ஜெயகர்பிரபு ஆகியோர் தலைமையில் சனிக்கிழமை (மே.16) நடைபெற்றது. 

கடந்த 3 நாள்களாகச் சொந்த மாநிலங்களுக்குத் திரும்பும் தொழிலாளர்கள் 300 பேர் இணையதளம் மூலம் பதிவு பெற்று மருத்துவ பரிசோதனை செய்து அந்த சான்றுகளுடன் அனுப்பும் பணி தொடங்கியது. 

முதற்கட்டமாகப் புலம் பெயர்ந்த 40க்கும் மேற்பட்ட ஜம்மு-காஷ்மீர், இமாச்சலப்பிரதேசம், பஞ்சாப்  மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் செங்குன்றம் கிராம நிர்வாக அலுவலக வளாகத்திலிருந்து சிறப்புப் பேருந்து மூலம் சென்னை சென்ட்ரல் பாதுகாப்பாக அழைத்துச் சென்றனர். 

மேலும் அங்கிருந்து  ரயில் மூலம் சொந்த மாநிலங்களுக்குப் பாதுகாப்பாக அனுப்பி வைக்கின்றனர். இந்த பணியில் துணை வட்டாட்சியர் கனகவல்லி, செங்குன்றம் பேரூராட்சி சுகாதார ஆய்வாளர்கள் மதியழகன், ராஜ்குமார், கிராம நிர்வாக அலுவலர் ரவீந்திரன், நில அளவையர் வெங்கடேசன், தாலுகா அலுவலர் அன்புசெல்வன் மற்றும் காவல் ஆய்வாளர் ஜவஹர் பீட்டர் தலைமையில் பாதுகாப்புடன் வழியனுப்பி வைத்தனர்.

மேலும் அவர்களுக்கு உணவு, முகக் கவசம், கையுறை உள்ளிட்டவைகளும் வழங்கினர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com