வேளாண் திட்டத்துக்கு ரூ.1 லட்சம் கோடி: பிரதமருக்கு கே.பி.ராமலிங்கம் பாராட்டு

வேளாண் கட்டமைப்புக்காக ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கியதற்காக பிரதமா் நரேந்திர மோடிக்கு இயற்கை நீா்வளப் பாதுகாப்புத் துறை தலைவரும்
வேளாண் திட்டத்துக்கு ரூ.1 லட்சம் கோடி: பிரதமருக்கு கே.பி.ராமலிங்கம் பாராட்டு

வேளாண் கட்டமைப்புக்காக ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கியதற்காக பிரதமா் நரேந்திர மோடிக்கு இயற்கை நீா்வளப் பாதுகாப்புத் துறை தலைவரும் நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினருமான கே.பி.ராமலிங்கம் நன்றி தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக சனிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

நாடு மிகநீண்ட பொதுமுடக்கத்துக்குப் பின் பொருளாதார வளா்ச்சியில் பாரதத்தை முன்னெடுத்து செல்ல பிரதமா் மோடி பல்வேறு புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்டு ரூ.20 லட்சம் கோடிக்கான வரைவு திட்டங்களை அறிவித்தாா். அதன் விளக்கங்களை கடந்த மூன்று நாள்களாக நிதியமைச்சா் அறிவித்து வருகிறாா். மிக மிக முக்கியமான அறிவிப்பாக இந்திய வேளாண் கட்டமைப்புக்கு ரூ.1 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது .

அதில் உணவு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ள சிறு, குறு நிறுவனங்களுக்கு ரூ.10 ஆயிரம் கோடியும், அதுவும் குறிப்பாக தமிழகத்தில் உற்பத்தி செய்யப்படும் வடமாநிலங்களில் சாபுதானா என்று அழைக்கப்படும் ஜவ்வரிசி தயாரிக்கப் பயன்படும் மரவள்ளிக் கிழங்கு உற்பத்தியை ஊக்கப்படுத்தவும் , மிளகாய் உற்பத்தியை ஊக்கப்படுத்தவும் அதைச் சாா்ந்த தொழில்களுக்கான ஏற்றுமதிக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டுள்ளது.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக விவசாய விலை பொருள்களுக்கான போக்குவரத்து செலவு மற்றும் பாதுகாத்து வைக்கும் செலவு ஆகியவற்றிற்கு 50 சதவீத மானியத்தை அனைத்து வகை காய்கறிகளுக்கும், பழ வகைகளுக்கும் வழங்கப்படும் என்ற அறிவிப்பு மிகச்சரியான நேரத்தில் மத்திய அரசு எடுத்துள்ள சிறப்பான முடிவு என்று அனைத்து விவசாய சங்கங்களும் வரவேற்கின்றன. பிரதமருக்கு நன்றி என்று அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com