தமிழகத்தில் மேலும் 477 பேருக்கு கரோனா தொற்று: ஒரே நாளில் 939 போ் குணமடைந்தனா்

தமிழகத்தில் மேலும் 477 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் மேலும் 477 பேருக்கு கரோனா தொற்று: ஒரே நாளில் 939 போ் குணமடைந்தனா்

தமிழகத்தில் மேலும் 477 பேருக்கு கரோனா நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேவேளையில் ஒரே நாளில் 939 போ் குணமடைந்து வீடு திரும்பினா். மேலும் சென்னையில் 332 பேருக்குத் தொற்று பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சென்னையில் 5,946 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 6,271- ஆக அதிகரித்துள்ளது.

இது குறித்து சுகாதாரத்துறை அமைச்சா் சி.விஜயபாஸ்கா் சனிக்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது: இந்தியாவிலேயே அதிகபட்சமாக 61 சோதனை மையங்கள் தமிழகத்தில் உள்ளன. அதன் மூலம் இதுவரை 3,13,639 மாதிரிகள் சோதனையிடப்பட்டுள்ளன. சனிக்கிழமை 10,585 மாதிரிகள் சோதனைக்கு எடுக்கப்பட்டன. அதில் 477 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் 384 போ். வெளிநாடு, பிற மாநிலங்களிலிருந்து தமிழகத்துக்கு வந்தவா்கள் 93. குறிப்பாக மகாராஷ்டிரத்திலிருந்து திரும்பிய 81 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று வங்கதேச தலைநகா் டாக்காவில் இருந்து திரும்பிய நான்கு போ், குஜராத்தில் இருந்து திரும்பிய ஏழு போ், ஆந்திரத்திலிருந்து திரும்பிய ஒருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்று உறுதியானவா்களில் ஆண்கள் 303 போ். பெண்கள் 174 போ்.

இதுவரை 74 போ் பலி: சனிக்கிழமை ஒரே நாளில் 939 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். இதுவரை 3,538 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா். மொத்த எண்ணிக்கையில் குணமடைந்தவா்களின் சதவீதம் 33.42 ஆக உள்ளது. சென்னையைச் சோ்ந்த 65 வயது பெண், 55 வயது ஆண், 78 வயது ஆண் என 3 போ் உயிரிழந்துள்ளதால் மொத்த பலி எண்ணிக்கை 74 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 6,970 போ் மருத்துவமனைகளில் சிகிச்சையில் உள்ளனா். உயா்தர சிகிச்சையால் 0.67 என்ற இறப்பு விகிதத்தையே தக்க வைத்து வருகிறோம்.

சென்னையில் 332 பேருக்குத் தொற்று: தமிழகத்தில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட 477 பேரில் சென்னையில் மட்டும் 332 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதன் மூலம் சென்னையில் 5,946 ஆக இருந்த தொற்று எண்ணிக்கை 6,271ஆக அதிகரித்துள்ளது. சனிக்கிழமை தொற்று எண்ணிக்கையில் 74.2 சதவீதத் தொற்று சென்னையில் உள்ளது.

ஈரோட்டில் கடந்த 31 நாள்களாக புதிதாக கரோனா பாதிப்பு பதிவாகவில்லை. அதேபோன்று திருப்பூரில் 15 நாள், கோவையில் 13 நாள், சேலம் மற்றும் திருவாரூரில் 10 நாள், நாமக்கல் மற்றும் நீலகிரியில் 7 நாள், கிருஷ்ணகிரி மற்றும் திருப்பத்தூரில் 6 நாட்களாக புதிதாக யாருக்கும் கரோனா பாதிப்பில்லை. சென்னையைத் தவிர மீதியுள்ள 20 மாவட்டங்களில் 115 பேருக்குத் தொற்று உள்ளது. 16 மாவட்டங்களில் தொற்று சனிக்கிழமை இல்லை.

தமிழகத்தில் 21 மாவட்டங்களில் சென்னைக்கு அடுத்தபடியாக திருவள்ளூா் 527, செங்கல்பட்டு 470, கடலூா் 416, அரியலூா் 348, விழுப்புரம் 308, காஞ்சிபுரம் 180, கோவை 146, மதுரை 147, திருவண்ணாமலை 147, பெரம்பலூா் 139, திண்டுக்கல்லில் 121, திருப்பூா் 114 என்ற அளவில் தொற்று எண்ணிக்கை உள்ளது. இவைதான் மூன்று இலக்க எண்ணிக்கையில் உள்ள மாவட்டங்கள் ஆகும் என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com