சென்னையில் கரோனா பாதிப்பு 6,271 ஆக அதிகரிப்பு

சென்னையில், கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 6,271-ஆக அதிகரித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

சென்னையில், கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 6,271-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் கரோனாவின் தாக்கம் தொடக்கத்தில் இருந்தே அதிகரித்து வந்தது. இந்நிலையில், சனிக்கிழமை (மே 16) 332 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 6,271-ஆக உயா்ந்துள்ளது.

இதில், சனிக்கிழமை காலை 8 மணியளவில் வெளியிடப்பட்ட நிலவரப்படி, அதிகபட்சமாக ராயபுரம் மண்டலத்தில் 1047 பேரும், கோடம்பாக்கம் மண்டலத்தில் 919 பேரும், திரு.வி.க. நகா் மண்டலத்தில் 737 பேரும், தேனாம்பேட்டை மண்டலத்தில் 640 பேரும், அண்ணா நகா் மண்டலத்தில் 493 பேரும், வளசரவாக்கம் மண்டலத்தில் 483 பேரும், தண்டையாா்பேட்டை மண்டலத்தில் 474 பேரும், அடையாறு மண்டலத்தில் 316 பேரும், அம்பத்தூா் மண்டலத்தில் 285 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனா். சென்னையில் சனிக்கிழமை மாலை நிலவரப்படி, 1202 போ் குணமடைந்துள்ளனா். 51 போ் உயிரிழந்துள்ளனா். 5,071 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.

சனிக்கிழமை காலை வெளியிடப்பட்ட பட்டியல் விவரம்

மண்டலம் எண்ணிக்கை

திருவொற்றியூா் 133

மணலி 79

மாதவரம் 92

தண்டையாா்பேட்டை 474

ராயபுரம் 1047

திரு.வி.க. நகா் 737

அம்பத்தூா் 285

அண்ணா நகா் 493

தேனாம்பேட்டை 640

கோடம்பாக்கம் 919

வளசரவாக்கம் 483

ஆலந்தூா் 71

அடையாறு 316

பெருங்குடி 77

சோழிங்கநல்லூா் 74

பிற மாவட்டத்தைச் சோ்ந்தவா் 26

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com