தமிழகத்தில் மேலும் 639 பேருக்கு கரோனா; பாதிப்பு 11 ஆயிரத்தைத் தாண்டியது!

தமிழகத்தில் மேலும் 639 பேருக்கு கரோனா; பாதிப்பு 11 ஆயிரத்தைத் தாண்டியது!

தமிழகத்தில் மேலும் 639 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல்  வெளியிட்டுள்ளது. 

தமிழகத்தில் மேலும் 639 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத்துறை தகவல் வெளியிட்டுள்ளது. இதன் மூலமாக தமிழகத்தில் கரோனா பாதிப்பு எண்ணிக்கை 11,224 ஆக அதிகரித்துள்ளது.

தமிழக சுகாதாரத்துறை தரப்பில் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழகத்தில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 639 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் ஒரேநாளில் 482 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் சென்னையில் பாதிப்பு 6,750  ஆக உயர்ந்துள்ளது. பிற மாவட்டங்களில் இன்று 4,464 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இன்று பாதிப்புக்குள்ளான 639 பேரில் 73 பேர் மகாராஷ்டிரத்தில் இருந்து வந்தவர்கள். மேலும், கர்நாடகம் மற்றும் ராஜஸ்தானில் இருந்து தலா இருவரும், தெலுங்கானாவில் இருந்து 3 பேர், ஆந்திரத்தில் இருந்து ஒருவரும் இதில் அடங்குவர். 

இன்று மட்டும் நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் பலி எண்ணிக்கை 78 ஆக உயர்ந்துள்ளது. மேலும் இன்று குணமடைந்தோர் எண்ணிக்கை 634. மொத்தமாக குணமடைந்தோர் எண்ணிக்கை 4,172. தற்போது 6,971 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 

தமிழகத்தில் இன்று மட்டும் மொத்தம் 13,081 மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டன. இதன்மூலம், இங்கு மொத்தம் பரிசோதிக்கப்பட்ட மாதிரிகளின் எண்ணிக்கை 3,26,720 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் இன்று பரிசோதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 12,445. மொத்தம் பரிசோதிக்கப்பட்ட நபர்களின் எண்ணிக்கை 3,11,621. தமிழகத்தில் கரோனா பரிசோதனை ஆய்வகங்களின் எண்ணிக்கை 61 ஆக அதிகரித்துள்ளது. 

கடந்த மூன்று தினங்களாக பாதிப்பு 500க்கும் குறைவாக இருந்த நிலையில் இன்று பாதிப்பு எண்ணிக்கை 500 ஐத் தாண்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com