சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வில் விடுபட்ட பாடங்களுக்கான அட்டவணை வெளியீடு

சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு, பொதுத்தேர்வில் விடுபட்ட பாடங்களுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 
சிபிஎஸ்இ பிளஸ் 2 பொதுத்தேர்வில் விடுபட்ட பாடங்களுக்கான அட்டவணை வெளியீடு


சென்னை:  சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பிளஸ் 2 பயிலும் மாணவர்களுக்கு, பொதுத்தேர்வில் விடுபட்ட பாடங்களுக்கான தேர்வு அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. 

இந்தத் தேர்வுகள் வரும் 1-ஆம் தேதி முதல் ஜூலை 15}ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இதற்கான அட்டவணை சிபிஎஸ்இ}யின் அதிகாரப்பூர்வ வலைதளத்தில் (www.cbse.nic.in) வெளியிட்டுள்ளது. 

கரோனா தீநுண்மி பாதிப்பு காரணமாக பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. அனைத்து கல்வி நிறுவனனங்களும் விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் சிபிஎஸ்இ பாடத்திட்டத்தில் பிளஸ் 2 வகுப்பில் சில தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டன.  இந்தத் தேர்வுகள், ஜூலை 1 முதல் 15}ஆம் தேதி வரை நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. 

இதைத் தொடர்ந்து சிபிஎஸ்இ பொதுத்தேர்வு கால அட்டவணை திங்கள்கிழமை (மே 18) வெளியிடப்படும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் ரமேஷ் பொக்கிரியால் தனது சுட்டுரைப் பக்கத்தில் தெரிவித்திருந்தார்.

இந்தநிலையில் அவர் கூறியபடி பிளஸ் 2 பொதுத்தேர்வு அட்டவணையை, தனது சுட்டுரைப் பக்கத்தில்  திங்கள்கிழமை  வெளியிட்டார். 

அதன்படி ஏற்கெனவே அறிவித்தபடி  ஜூலை 1-ஆம் தேதி முதல் ஜூலை 15-ஆம் தேதி வரை பிளஸ் 2 வகுப்பில் விடுபட்ட பாடங்களுக்கான  தேர்வுகள் நடைபெறுகின்றன. 

வடகிழக்கு தில்லியில்... மேலும் வடகிழக்கு தில்லியில் சிஏஏ விவகாரம் தொடர்பாக ஏற்பட்ட வன்முறையால் அங்கு மட்டும் சிபிஎஸ்இ பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் சில பாடங்களுக்கான தேர்வு ஒத்திவைக்கப்பட்டிருந்தன. அந்தத் தேர்வுகளுக்கான அட்டவணையும் சிபிஎஸ்இஅதிகாரப்பூர்வ வலைதளத்தில் (www.cbse.nic.in) வெளியிடப்பட்டுள்ளது. 

பொதுத்தேர்வுகள் காலை 10.30 மணி முதல் 1.30 மணி வரை என நடைபெறும். மாணவர்கள் கட்டாயம் முகக் கவசம் அணிந்து வருவதோடு தேர்வறைக்கு கிருமிநாசினி கொண்டுவர வேண்டும்; தேர்வறையில் சமூக இடைவெளி கடைப்பிடிக்கப்படும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com