புதுச்சேரி: ஆளுநரின் ஒப்புதலைப் பெற்ற பிறகே மதுக் கடைகள் திறப்பு

ஆளுநரின் ஒப்புதலைப் பெற்ற பிறகே புதுவையில் மதுக் கடைகள் திறக்கப்படும் என முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.
புதுச்சேரி: ஆளுநரின் ஒப்புதலைப் பெற்ற பிறகே மதுக் கடைகள் திறப்பு


புதுச்சேரி: ஆளுநரின் ஒப்புதலைப் பெற்ற பிறகே புதுவையில் மதுக் கடைகள் திறக்கப்படும் என முதல்வர் வே.நாராயணசாமி தெரிவித்தார்.

முன்னதாக, அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னர், மதுக் கடைகள் செவ்வாய்க்கிழமை (மே 19) முதல் திறக்கப்படும் என முதல்வர் நாராயணசாமி திங்கள்கிழமை பகலில் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். இந்த நிலையில், மீண்டும் இரவு செய்தியாளர்களைச் சந்தித்த அவர், மதுக் கடைகள் திறக்கப்படாது எனத் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது: தில்லி, ஆந்திரம், கர்நாடகம், கேரளம், தமிழகம் உள்ளிட்ட மாநிலங்கள் மதுபானங்களுக்கு கரோனா வரி விதித்துள்ளன. மற்ற மாநிலங்களைப் போல கரோனா வரி விதிக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளோம். புதுவை மாநிலத்தில் மதுவுக்கு கரோனா வரி விதித்துள்ளோம். 

இதுதொடர்பாக புதுவை அமைச்சரவைக் கூட்டம் அவசரமாக இரவில் கூட்டப்பட்டது. 

இதில், மதுபானங்களுக்கான கரோனா வரி உயர்வு தமிழகத்தை ஒப்பிடுகையில் 50 சதவீதமாகவும், கேரளம், ஆந்திர மாநிலங்களை ஒப்பிடுகையில் 75 சதவீதமாகவும் இருக்கும்படி அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது. இதேபோல, பெட்ரோல், டீசலுக்கும் கரோனா வரி விதித்துள்ளோம்.
அமைச்சரவையின் முடிவுகள் துணைநிலை ஆளுநர் கிரண் பேடிக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

ஆளுநரின் ஒப்புதல் கிடைத்தவுடன், அரசாணை வெளியிடப்படும். அதன் பிறகே மதுக் கடைகள் திறக்கப்படும். புதன்கிழமை (மே 20) அல்லது ஓரிரு நாள்களுக்குள் மதுக் கடைகளைத் திறக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com