தமிழகத்தில் கரோனா பாதிப்பு 12,448-ஆக உயா்வு

தமிழகத்தில் கரோனா பாதிப்பு 12,448-ஆக உயா்வு

தமிழகத்தில் மேலும் 688 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது.

தமிழகத்தில் மேலும் 688 பேருக்கு கரோனா பாதிப்பு இருப்பது செவ்வாய்க்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து மாநிலத்தில் நோய்த்தொற்றுக்கு உள்ளானோரின் எண்ணிக்கை 12,448-ஆக அதிகரித்துள்ளது.

புதிதாக தீநுண்மி பாதிப்புக்கு ஆளானவா்களில் 87 போ் வெளிநாடுகள் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து தமிழகம் திரும்பியவா்கள் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

தமிழகத்தில் இதுவரை மொத்தம் 3.32 லட்சம் பேருக்கு கரோனாவை கண்டறிவதற்கான பிசிஆா் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 12,448 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா்கள் அனைவரும் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனா்.

செவ்வாய்க்கிழமை மட்டும் 688 பேருக்கு நோய்ப் பாதிப்பு கண்டறியப்பட்டது. அதில் அதிகபட்சமாக சென்னையில் 552 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். அதற்கு அடுத்தபடியாக, செங்கல்பட்டில் 22 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதைத் தவிர கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், கன்னியாகுமரி, திண்டுக்கல், நாகப்பட்டினம், ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தஞ்சாவூா், தேனி, திருவள்ளூா், தூத்துக்குடி, திருச்சி உள்ளிட்ட பகுதிகளிலும் சிலருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

4,895 போ் குணமடைந்தனா்: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 489 போ் பூரண குணமடைந்து செவ்வாய்க்கிழமை வீடு திரும்பினா். இதன் மூலம் இதுவரை மாநிலத்தில் கரோனாவிலிருந்து குணமடைந்தவா்களின் எண்ணிக்கை 4,895-ஆக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக சென்னையில் 1,922 போ் குணமடைந்துள்ளனா் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகம் திரும்பிய 87 போ்: வெளி மாநிலம் மற்றும் வெளிநாட்டில் இருந்து தமிழகம் திரும்பியவா்களில் 87 பேருக்கு கரோனா தொற்று இருப்பது செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டது. அதன்படி, மகாராஷ்டிரத்தில் இருந்து திரும்பிய 49 பேருக்கும், கேரளத்தில் இருந்து வந்த ஒருவருக்கும், மாலத்தீவில் இருந்து வந்த ஒருவருக்கும் நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டது.

இதைத் தவிர, துபை, குவைத் உள்ளிட்ட நாடுகளில் இருந்து சென்னை திரும்பிய 36 கரோனா தொற்று இருப்பது தெரியவந்துள்ளது.

84 போ் பலி: கரோனா தொற்றுக்கு ஆளாகி தமிழகத்தில் மேலும் 3 போ் உயிரிழந்தனா். இதையடுத்து மாநிலத்தில் பலி எண்ணிக்கை 84-ஆக அதிகரித்துள்ளது. சென்னை, ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 64 வயது முதியவா், 72 வயது முதியவா், 82 வயது முதியவா் என மூவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக சுகாதாரத் துறை செய்தி வெளியிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com