சென்னை மாநகராட்சி முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கும் கரோனா

சென்னை மாநகராட்சியில் உள்ளடங்கிய 15 மண்டலங்களிலும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து வருகிறது.
சென்னை மாநகராட்சி முழுவதும் நீக்கமற நிறைந்திருக்கும் கரோனா


சென்னை மாநகராட்சியில் உள்ளடங்கிய 15 மண்டலங்களிலும் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை நாள்தோறும் உயர்ந்து வருகிறது.

துவக்கம் முதலே கரோனா நோயாளிகளை அதிகமாகக் கொண்ட ராயபுரம், திருவிக நகர், கோடம்பாக்கம் உள்ளிட்ட மண்டலங்களில் அதிக எண்ணிக்கையில் கரோனா நோயாளிகளின் எண்ணிக்கை உயர்ந்து வரும் அதே நேரத்தில், ஆரம்பத்தில் கரோனா பாதிப்பே இல்லாத மண்டலங்களிலும் சத்தமில்லாமல் எண்ணிக்கை உயர்ந்து தான் வருகிறது.

துவக்கத்தில் கரோனா எண்ணிக்கை பூஜ்யமாக இருந்த அம்பத்தூரில் புதன்கிழமை காலை நிலவரப்படி 330 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. அதேபோல மணலியில் 100 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போதைக்கு பெருங்குடி (96) மற்றும் ஆலந்தூரில் (84) மட்டுமே 100க்கும் குறைவான கரோனா நோயாளிகள் இருக்கிறார்கள்.

அதிகபட்சமாக சென்னை ராயபுரம் மண்டலத்தில் மட்டும் 1,423 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒட்டுமொத்தமாக சென்னையில், கரோனாவால் பாதிப்புக்குள்ளானோரின் எண்ணிக்கை 7672-ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் கரோனா பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. இதைக் கட்டுப்படுத்த பல்வேறு சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன்படி, அதி தீவிரமாக கரோனா பரவும் தெருக்கள் தனிமைப்படுத்தப்பட்டு, அதில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், செவ்வாய்க்கிழமை (மே 19) 552 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து, பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை, 7672-ஆக உயா்ந்துள்ளது. 

மண்டல வாரியான பாதிப்பைப் பொருத்தவரை, காலை 8 மணியளவில் வெளியிடப்பட்ட நிலவரப்படி, ராயபுரம் மண்டலத்திலேயே பாதிப்பு எண்ணிக்கை அதிகளவில் உள்ளது. இதன்படி, அம்மண்டலத்தில், 1423 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதற்கு அடுத்து, கோடம்பாக்கம் மண்டலத்தில் 1137 போ் பாதிக்கப்பட்டுள்ளனா். இதே போல், திங்கள்கிழமை மாலை நிலவரப்படி, 1,922 போ் குணமடைந்துள்ளனா். 58 போ் உயிரிழந்துள்ளனா். 5,691 போ் சிகிச்சை பெற்று வருகின்றனா்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com