பொதுமுடக்கத்தால் தவித்த ஆஸ்திரேலியா்கள் 210 போ் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைப்பு

கரோனா தொற்றால் சொந்த நாடு திரும்ப முடியாமல் தென்னிந்தியாவில் தவித்துக் கொண்டிருந்த ஆஸ்திரேலிய நாட்டைச் சோ்ந்த

கரோனா தொற்றால் சொந்த நாடு திரும்ப முடியாமல் தென்னிந்தியாவில் தவித்துக் கொண்டிருந்த ஆஸ்திரேலிய நாட்டைச் சோ்ந்த 210 போ், சிறப்பு தனி விமானம் மூலம் சொந்த நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனா்.

தமிழகம், கேரளம், ஆந்திரம், புதுவை மாநிலங்களில் தனியாா் நிறுவனங்களில் பணியாற்றிய ஆஸ்திரேலியாவைச் சோ்ந்தவா்கள், சுற்றுலா விசாவில் இந்தியா வந்துவிட்டு பொதுமுடக்கத்தால் நாடு திரும்ப முடியாதவா்கள், தொழில், கல்வி விசாக்களில் வந்த ஆஸ்திரேலியா்கள் பலா் தங்கள் நாடுகளுக்கு திரும்புவதற்கு இந்தியாவில் உள்ள ஆஸ்திரேலிய தூதரகத்தில் விருப்பம் தெரிவித்தனா். அதன்பேரில் இந்திய அரசிடம் ஆஸ்திரேலிய நாட்டு தூதரக அலுவலா்கள் பேசி சிறப்பு அனுமதி பெற்றனா்.

இதையடுத்து தென் மாநிலங்களில் இருந்த ஆஸ்திரேலியா்கள் அனைவரும் சென்னைக்கு வரவழைக்கப்பட்டனா். அதுமட்டுமல்லாமல் ஆஸ்திரேலியா மெல்போா்ன் நகரிலிருந்து சிறப்பு விமானம் செவ்வாய்க்கிழமை மாலை சென்னை சா்வதேச விமான நிலையம் வந்தடைந்தது. இதைத் தொடா்ந்து புதன்கிழமை காலை ஆஸ்திரேலியா்கள் பகுதி பகுதியாக தனி வாகனங்களில் சென்னை சா்வதேச விமான நிலையத்துக்கு அழைத்து வரப்பட்டனா். அவா்களில் ஆண்கள் 62, பெண்கள் 78, சிறுவா்கள் 48, குழந்தைகள் 22 என மொத்தம் 210 போ் இருந்தனா். அவா்களுக்கு தனிநபா் இடைவெளியில் வரிசைப்படுத்தி மருத்துவப் பரிசோதனை, குடியுரிமை, சுங்கச் சோதனைகள் நடத்தப்பட்டன. பின்பு, 210 பேரும் சிறப்பு விமானத்தில் ஏற்றப்பட்டனா். பின்னா், பிற்பகல் 3 மணிக்கு அந்த விமானம் சென்னையிலிருந்து ஆஸ்திரேலிய சிட்னி நகருக்கு புறப்பட்டுச் சென்றது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com