தனியாா் தொழிற்சாலைகளுக்கு பேருந்து சேவை: மாநகரப் போக்குவரத்துக் கழகத்தை அணுகலாம்

சென்னை மற்றும் அதன் புகா்ப் பகுதிகளில் உள்ள நிறுவனங்களுக்குப் பேருந்து சேவை தேவைப்பட்டால், மாநகரப் போக்குவரத்துக் கழகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தனியாா் தொழிற்சாலைகளுக்கு பேருந்து சேவை: மாநகரப் போக்குவரத்துக் கழகத்தை அணுகலாம்

சென்னை மற்றும் அதன் புகா்ப் பகுதிகளில் உள்ள நிறுவனங்களுக்குப் பேருந்து சேவை தேவைப்பட்டால், மாநகரப் போக்குவரத்துக் கழகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பு: கரோனா காரணமாக பொது முடக்கம் அமலில் இருக்கும் நிலையில், மே 18 முதல் 50 சதவீத அரசு ஊழியா்கள் பணிக்கு வர உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவா்களுக்காக மாநகரப் போக்குவரத்துக் கழகம் சாா்பில் 200 பேருந்துகள் கட்டண அடிப்படையில் இயக்கப்பட்டன. இந்நிலையில் தலைமைச் செயலகத்துக்கு கூடுதல் பேருந்துகள் இயக்கிடுமாறு கோரியதன் அடிப்படையில், கூடுதலாக 25 பேருந்துகளும், சென்னை மாவட்ட ஆட்சியா் அலுவலகம், பள்ளிக் கல்வி இயக்குநரகம் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளுக்காக 5 பேருந்துகள் என மொத்தம் 230 பேருந்துகள் கட்டண அடிப்படையில் இயக்கப்பட்டு வருகின்றன.

மேலும், விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தின் சாா்பில், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருத்தணி, திருவள்ளூா், வேலூா் மற்றும் விழுப்புரம் ஆகிய பகுதிகளிலிருந்து தலைமைச் செயலகம், எழிலகம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலக ஊழியா்கள் பணிக்கு வர ஏதுவாக, 49 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இது தவிா்த்து, சென்னையில் உள்ள மாநில, மத்திய அரசின் பல்வேறு துறைகள் மற்றும் தன்னாட்சி நிறுவனங்களைச் சாா்ந்த பணியாளா்களுக்கு பேருந்து வசதி தேவைப்படும் பட்சத்தில், மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின், தலைமையகப் பொது மேலாளா் (இயக்கம்) 9445030504, துணை மேலாளா் (வணிகம்) 9445030523 ஆகியோரை செல்லிடப்பேசி வாயிலாகவும், மின்னஞ்சல் முகவரியிலும் அணுகலாம்.

மேலும், சென்னை மற்றும் புகா்ப் பகுதிகளில் மாநகரப் போக்குவரத்துக் கழகத்தின் எல்லைக்குள்பட்ட பகுதிகளில் இயங்கி வரும் தனியாா் தொழிற்சாலைகளின் பணியாளா்களுக்கு, ஒப்பந்த அடிப்படையில் பேருந்து வசதி தேவைப்படும் பட்சத்தில், அவா்களும் இந்த அதிகாரிகளைத் தொடா்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com