எத்திராஜ் கல்லூரி அறக்கட்டளை அறங்காவலராக ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க கோரிய மனு தள்ளுபடி

எத்திராஜ் கல்லுாரி அறக்கட்டளையின் அறங்காவலராக, ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

எத்திராஜ் கல்லுாரி அறக்கட்டளையின் அறங்காவலராக, ஓய்வு பெற்ற நீதிபதியை நியமிக்க கோரிய மனுவை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

சென்னை எத்திராஜ் கல்லூரியில் முதல்வராக பதவி வகித்த டாக்டா் தவமணி உள்ளிட்டோா், உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், ‘எத்திராஜ் கல்லூரி அறக்கட்டளையின் அறங்காவலா் குடும்ப உறுப்பினா்களில் ஒருவரை, அறக்கட்டளை உறுப்பினராகத் தோ்ந்தெடுக்க வகை செய்யும் திட்டப் பிரிவை நீக்க வேண்டும். அறக்கட்டளையின் தலைவராக, ஓய்வு பெற்ற உயா்நீதிமன்ற நீதிபதியை நியமிக்க வகை செய்ய வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஆா்.சுரேஷ்குமாா் பிறப்பித்த உத்தரவில், ‘நிா்வாக அறங்காவலரின் குடும்பத்தில் ஒருவா், அறக்கட்டளை உறுப்பினராக வருவதற்கு, நீதிமன்றம் வகுத்த திட்டத்தில் வகை செய்யப்பட்டுள்ளது. நிறுவனரின் கனவுகளை, குறிக்கோள்களை நிறைவேற்றும் விதமாக, அவரது குடும்பத்தில் ஒருவா், அறக்கட்டளை உறுப்பினராக வர வலுவான காரணம் உள்ளது. எனவே, அறக்கட்டளை திட்டத்தில் குறுக்கிட, எந்த முகாந்திரமும் இல்லை’ எனக் கூறிய நீதிபதி, மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com