திருச்செந்தூர் கோயில் கடல் உள்வாங்கியதால் வெளியே தெரிந்த பாறைகள்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடலானது அமாவாசையை முன்னிட்டு  உள்வாங்கியதால் பாறைகள் வெளியே தெரிந்தன.
திருச்செந்தூர் கோயில் கடல் உள்வாங்கியதால் வெளியே தெரிந்த பாறைகள்

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடலானது அமாவாசையை முன்னிட்டு  உள்வாங்கியதால் பாறைகள் வெளியே தெரிந்தன.

வழக்கமாகவே அமாவாசை, பௌர்ணமி போன்ற நாட்களில் கடல் நீர் மட்டமானது உள் வாங்குவதும், வெளியே வருவதும் வாடிக்கையாகும். சுனாமிக்குப் பிறகு திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் கடலில் அமாவாசை, பெளர்ணமி நாட்களில் இது போன்ற நிகழ்வு அதிகரித்துள்ளது. 

இந்நிலையில் வெள்ளிக்கிழமை அமாவாசையை முன்னிட்டு திருச்செந்தூர் கோயில் அருகில் கடல் நீரானது சிறிது நேரம் உள்வாங்கியதால் உள்ளே இருந்த பாசி படர்ந்த பாறைகள் வெளியே தெரிந்தது. 

தற்போது கரோனா பொது முடக்கத்தால் பக்தர்கள்  தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளதால் திருக்கோயில் மற்றும் கடற்கரை பகுதி வெறிச்சோடி காணப்படுகிறது. இருப்பினும் திருக்கோயில் காவல்துறையினர்  தொடர்ந்து கடற்கரை பகுதியைக் கண்காணித்து வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com