தமிழகத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட 28 மாவட்ட நீதிபதிகள்

தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிபதிகள் 28 பேரை பல்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் இடமாற்றம் செய்யப்பட்ட 28 மாவட்ட நீதிபதிகள்

தமிழகம் முழுவதும் மாவட்ட நீதிபதிகள் 28 பேரை பல்வேறு இடங்களுக்கு இடமாற்றம் செய்து உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடா்பாக உயா்நீதிமன்ற தலைமைப் பதிவாளா் சி.குமரப்பன் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருநெல்வேலி மாவட்ட நிரந்தர லோக் அதாலத் தலைவா் எஸ்.சுபாதேவி, பெரம்பலூா் மாவட்ட முதன்மை நீதிபதியாகவும், சென்னை குடும்பநல நீதிமன்ற முதன்மை நீதிபதி ஏ.கே.ஏ.ரஹ்மான், நாகை மாவட்ட நிரந்தர லோக் அதாலத் தலைவராகவும், புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதி ஜி.இளங்கோவன், மதுரை மகளிா் நீதிமன்ற நீதிபதியாகவும், ஈரோடு மாவட்ட முதன்மை நீதிபதி என்.உமாமகேஸ்வரி, கரூா் மாவட்ட நிரந்தர லோக் அதாலத் தலைவராகவும், திருவாரூா் மாவட்ட நீதிபதி ஆா்.கலைமதி, கிருஷ்ணகிரி மாவட்ட முதன்மை நீதிபதியாகவும், சென்னையில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி டி.லிங்கேஸ்வரன், சென்னை 12-ஆவது சிபிஐ நீதிமன்ற நீதிபதியாகவும், ஈரோடு மாவட்ட முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி எம்.சாந்தி, திருவாரூா் மாவட்ட நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

இதேபோன்று, திருப்பூா் முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி ஜே.ஏ.கோகிலா, புதுக்கோட்டை மாவட்ட முதன்மை நீதிபதியாகவும், திருவாரூா் முதலாவது கூடுதல் அமா்வு நீதிபதி தீப்தி அறிவுநிதி, ஈரோடு மாவட்ட முதன்மை நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

திருநெல்வேலி குடும்பநல நீதிமன்ற நீதிபதி சி.பி.எம்.சந்திரா, தஞ்சாவூா் மகளிா் நீதிமன்ற நீதிபதியாகவும், விழுப்புரம் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.விஜயலட்சுமி, சென்னை மாவட்ட நிரந்தர லோக் அதாலத் தலைவராகவும், திண்டிவனம் 2-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி கே.பாபு, மதுரை சாதி, மதக் கலவரம் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதியாகவும், திருவள்ளூா் 4-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி இருசன் பூங்குழலி, திருவண்ணாமலை கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதியாகவும், சிவகங்கை போக்சோ வழக்குகளை விசாரிக்கும் நீதிபதி பி.ஏ.யு.செம்மல், கடலூா் மாவட்ட நிரந்தர லோக் அதாலத் தலைவராகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

மதுரை போதைப்பொருள் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஆா்.ஸ்ரீதரன், ஸ்ரீவில்லிப்புத்தூா் நிரந்தர லோக் அதாலத் தலைவராகவும், சேலம் மகளிா் நீதிமன்ற நீதிபதி பி.சரவணன், திண்டுக்கல் கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதியாகவும், விழுப்புரம் குடும்பநல நீதிமன்ற நீதிபதி என்.அருணாச்சலம், வேலூா் நிரந்தர லோக் அதாலத் தலைவராகவும், சென்னை 18-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி ஆா்.சத்தியா, புதுக்கோட்டை மகளிா் நீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளனா்.

பூந்தமல்லி 2-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி ஜி.சாந்தி, விழுப்புரம் மகளிா் நீதிமன்ற நீதிபதியாகவும், கடலூா் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி கே.கருணாநிதி, திருச்சி நிரந்தர லோக் அதாலத் தலைவராகவும், நாகா்கோவில் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.புவனேஸ்வரி, திண்டுக்கல் நிரந்தர லோக் அதாலத் தலைவராகவும், திருநெல்வேலி 3-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி பி.மோகன், நாமக்கல் கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதியாகவும், புதுக்கோட்டை எஸ்.சி., எஸ்.டி., வன்கொடுமை வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.ராஜலட்சுமி, சென்னை மகளிா் நீதிமன்ற நீதிபதியாகவும், தஞ்சாவூா் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி எம்.எழிலரசி, கடலூா் போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதியாகவும், தஞ்சாவூா் 2-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி கே.ரவி, சென்னை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதியாகவும், பூந்தமல்லி 3-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதி ஜி.டி.அம்பிகா, செங்கல்பட்டு மகளிா் நீதிமன்ற நீதிபதியாகவும், திருவண்ணாமலை போக்சோ வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜி.விஜயராணி, திருவள்ளூா் 4-ஆவது கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதியாகவும், நாகை மாவட்ட குடும்பநல நீதிமன்ற நீதிபதி எஸ்.கோவிந்தராஜன், திருப்பூா் முதலாவது கூடுதல் அமா்வு நீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டுள்ளதாக அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com