ஆலந்தூர், பெருங்குடி, அம்பத்தூரில் நோய்த்தாக்கம் குறைந்து வருகிறது: சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்

ஆலந்தூர், பெருங்குடி, அம்பத்தூரில் நோய்த்தாக்கம் குறைந்து வருகிறது என்று சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 
ஆலந்தூர், பெருங்குடி, அம்பத்தூரில் நோய்த்தாக்கம் குறைந்து வருகிறது: சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன்

ஆலந்தூர், பெருங்குடி, அம்பத்தூரில் நோய்த்தாக்கம் குறைந்து வருகிறது என்று சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். 

சென்னை நொச்சிக்குப்பம் பகுதியில் கரோனா தடுப்பு சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் இன்று ஆய்வு செய்தார். அவருடன் மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் உடன் இருந்தார். பின்னர் சிறப்பு அதிகாரி ராதாகிருஷ்ணன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், புதிய கோணங்களில் கரோனா நோய்த் தொற்றை தடுக்கும் பணி நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் கரோனா இறப்பு விகிதத்தை மேலும் குறைக்க முயற்சி எடுத்து வருகிறோம். நோய்த் தொற்று அதிகமுள்ள பகுதிகளில் முக கவசம் அணியும் பழக்கத்தை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். நோய் பாதிப்பு எண்ணிக்கை அதிகரிப்பால் பொதுமக்கள் அச்சப்பட வேண்டாம். ஆலந்தூர், பெருங்குடி, அம்பத்தூரில் நோய்த்தாக்கம் குறைந்து வருகிறது.

குடிசை பகுதிகளிலும் நோய்த்தொற்றை கண்டறியும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். சவாலான பகுதிகளான ராயபுரம், கோயம்பேடு உள்ளிட்ட பகுதிகளில் நோய்த்தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சென்னையில் 3791 பேர் இதுவரை முழுமையாக குணமடைந்துள்ளனர்.

இறப்பு விகிதம் 0.7% என்ற அளவில் மட்டுமே உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com