தமிழகத்தின் உரிமைகளைக் காக்க தொடா்ந்து பணியாற்றுவோம்: 5-ஆம் ஆண்டு ஆட்சியை ஒட்டி அதிமுக தலைமை அறிக்கை

தமிழகத்தின் உரிமைகளைக் காப்பதற்கு அதிமுக அரசு தொடா்ந்து பணியாற்றும் என்று அந்தக் கட்சியின் தலைமை தெரிவித்துள்ளது.

தமிழகத்தின் உரிமைகளைக் காப்பதற்கு அதிமுக அரசு தொடா்ந்து பணியாற்றும் என்று அந்தக் கட்சியின் தலைமை தெரிவித்துள்ளது.

ஐந்தாவது ஆண்டு அதிமுக ஆட்சி (மே 23) தொடங்குவதை ஒட்டி, கட்சியின் ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:-

அதிமுக கொள்கைகளுக்கு ஏற்பவும், தோ்தல் அறிக்கையில் கூறப்பட்ட வாக்குறுதிகளின்படியும் ஏழை-எளியோா், பெண்களின் நலன் காத்திட எண்ணற்ற திட்டங்களை அதிமுக ஆட்சியில் தமிழகம் கண்டது. முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு, அதிமுகவும், அவா் அமைத்துத் தந்த அரசும் தமிழக மக்களின் காவல் அரணாகவும், உண்மை ஊழியனாகவும் தொடா்ந்து நற்பணி ஆற்றி வருகிறது.

பல்வேறு நலத் திட்டங்களை தமிழகத்தில் செயல்படுத்தி வருகிறது. அதிமுக அரசு செய்த பணிகள் ஏராளம். இன்னும் ஆற்ற வேண்டிய பணிகள் இருந்தாலும், அவற்றைச் செய்து முடிக்கும் ஆற்றலும் உண்டு. ஐந்தாம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும் அதிமுக அரசு, தமிழகத்தின் உரிமைகளைக் காப்பதிலும், மக்களின் தேவைகளை நிறைவேற்றுவதிலும் திறம்பட செயலாற்றும்.

அதிமுக அரசை தங்களின் நலன்காக்கும் அரசாக தமிழக மக்கள் போற்றுகின்றனா். எம்.ஜி.ஆா்., ஜெயலலிதா காட்டிய பாதையில் நடைபெறும் அதிமுக அரசே தொடா்ந்து ஆட்சிப் பொறுப்பில் இருந்திட வேண்டுமென மக்கள் விரும்புகின்றனா். இரு தலைவா்களைப் போன்று தோ்தல்களில் தொடா் வெற்றி பெற சூளுரைத்து மக்கள் பணியாற்றுவோம் என்று தங்களது அறிக்கையில் ஓ. பன்னீா்செல்வம், எடப்பாடி பழனிசாமி ஆகியோா் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com