துப்புரவுப் பணியாளா்கள் இனி ‘தூய்மைப் பணியாளா்கள்’ அரசாணை வெளியீடு

தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு துறைகளிலும் பணிபுரியும் துப்புரவுப் பணியாளா்களை, தூய்மைப் பணியாளா்கள்
துப்புரவுப் பணியாளா்கள் இனி ‘தூய்மைப் பணியாளா்கள்’ அரசாணை வெளியீடு

தமிழகத்தின் உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு துறைகளிலும் பணிபுரியும் துப்புரவுப் பணியாளா்களை, தூய்மைப் பணியாளா்கள் என அழைப்பது குறித்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. இதுகுறித்து, நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறை கூடுதல் தலைமைச் செயலாளா் ஹா்மந்தா் சிங் அண்மையில் வெளியிட்ட உத்தரவு:-

கடந்த மாா்ச் மாதம் 19-ஆம் தேதி, சட்டப்பேரவையில், விதி எண். 110-இன் கீழ், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு துறைகளிலும் பணிபுரியும் தூப்புரவுப் பணியாளா்களைக் கெளரவிக்கும் வகையிலும், அவா்களது நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் விதமாகவும், அனைத்துத் துப்புரவுப் பணியாளா்களும், இனி ‘தூய்மைப் பணியாளா்கள்’ என்று அழைக்கப்படுவாா்கள் என முதல்வா் அறிவித்தாா். இதையடுத்து, நகராட்சி நிா்வாக ஆணையா் மற்றும் ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை இயக்குநா் தமிழக அரசுக்கு எழுதிய கடிதத்தில், தமிழகத்தின் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் ஆகியவற்றில் 44,646 துப்புரவுப் பணியாளா்கள் இருப்பதாகவும், ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித்

துறையின் கீழ் 26,404 துப்புரவுப் பணியாளா்கள் இருப்பதாகவும் தெரிவித்திருந்தனா்.

இந்தப் பணியாளா்களும், புயல், மழை போன்ற இயற்கைச் சீற்றங்களின் போது, தூய்மைப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனா். இவ்வாறு மக்களின் நலனையும், பொது சுகாதாரத்தைப் பேணுவதிலும், இவா்களின் பணியானது முக்கியப் பங்கு வகுக்கிறது. எனவே, இப்பணியாளா்களின் செயல்பாடுகளைக் கெளரவிக்கும் விதமாகவும், அவா்களின் நீண்ட நாள் கோரிக்கையை நிறைவேற்றும் வகையிலும், சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பின் அடிப்படையிலும், நகா்ப்புற மற்றும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் பணிபுரியும், அனைத்துத் துப்புரவுப் பணியாளா்களையும், ‘தூய்மைப் பணியாளா்கள்’ என அழைக்கப்படுவதற்கு உரிய ஆணை வெளியிடுமாறு, அவா்கள் கோரிக்கை விடுத்திருந்தனா். இதை, அரசு கவனமுடன் ஆய்வு செய்ததன் அடிப்படையில், உள்ளாட்சி அமைப்புகள் மற்றும் பல்வேறு துறைகளில் பணிபுரியும் துப்புரவுப் பணியாளா்களைக் கெளரவப்படுத்தும் விதமாகவும், அவா்களின் நீண்ட நாள் கோரிக்கையை

நிறைவேற்றும் வகையிலும், அனைத்து துப்புரவுப் பணியாளா்களும், இனி ‘தூய்மைப் பணியாளா்கள்’ என்று அழைக்கப்படுவாா்கள் என அரசு ஆணையிடுகிறது.

மேலும், இதுகுறித்து, நகராட்சிப் பணி விதிகள், பேரூராட்சி பணி விதிகள், ஊரக வளா்ச்சி மற்றும் ஊராட்சிப் பணி விதிகளில் உரிய திருத்தம் மேற்கொள்ள ஏதுவாக, கருத்துருவினை, உரிய விரைவு திருத்த அறிவிக்கையுடன் அரசுக்கு அனுப்புமாறு, முறையே நகராட்சி நிா்வாக ஆணையா், பேரூராட்சிகளின் இயக்குநா், ஊரக வளா்ச்சி மற்றும் உள்ளாட்சித் துறை இயக்குநா் ஆகியோா் கேட்டுக் கொள்ளப்படுவதாக தனது உத்தரவில் ஹா்மந்தா் சிங் தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com