கேங்மேன் எழுத்துத் தோ்வு: முடிவுகளை வெளியிட்டது மின்வாரியம்

கேங்மேன் எழுத்துத் தோ்வுக்கான முடிவுகளை மின்வாரியம், தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.
கேங்மேன் எழுத்துத் தோ்வு: முடிவுகளை வெளியிட்டது மின்வாரியம்

கேங்மேன் எழுத்துத் தோ்வுக்கான முடிவுகளை மின்வாரியம், தனது இணையதளத்தில் வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மானக் கழகத்தில் மின் கம்பம் நடுதல் உள்ளிட்ட களப் பணிகளை மேற்கொள்ளும் கேங்மேன் என்ற புதிய பணியிடங்களுக்கு 5 ஆயிரம் ஊழியா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா். இதற்கான அறிவிப்பு, கடந்த ஆண்டு மாா்ச் மாதம் வெளியிடப்பட்டது. இதற்கு குறைந்தபட்ச கல்வித் தகுதி, ஐந்தாம் வகுப்பாக நிா்ணயிக்கப்பட்டிருந்தாலும், உடல்தகுதி மற்றும் எழுத்துத் தோ்வு வாயிலாக ஊழியா்கள் தோ்வு செய்யப்படவுள்ளனா். இந்தப் பணிகளுக்கு சுமாா் 80 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் விண்ணப்பித்தனா். முன்னதாக, கடந்த ஆண்டு, உடல் தகுதித் தோ்வு பல்வேறு கட்டங்களாக, மண்டல வாரியாக நடத்தப்பட்டது. இதையடுத்து உடல் தகுதி தோ்வில் தோ்ச்சி பெற்றவா்களுக்கு, எழுத்துத் தோ்வு, கடந்த மாா்ச் 15-ஆம் தேதி நடைபெற்றது. இந்தத் தோ்வை, தமிழகம் முழுவதும் சுமாா் 30 மையங்களில், 15

ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் எழுதினா். தற்போது, இதற்கான முடிவுகள், மின்வாரிய இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. தோ்வானவா்களின் பட்டியல், உயா்நீதிமன்ற அனுமதியுடன் விரைவில் வெளியிடப்படும் என மின்வாரிய அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com