புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறப்பு; மதுபானங்கள் விலை உயர்வு

புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 
டாஸ்மாக்
டாஸ்மாக்

புதுச்சேரியில் நாளை முதல் மதுக்கடைகள் திறக்கப்படும் என அமைச்சர் நமச்சிவாயம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார். 

நாடு முழுவதும் நான்காவது கட்டமாக பொது முடக்கம் (மே 31 வரை) நீட்டிக்கப்பட்டுள்ள நிலையில், வைரஸ் தொற்று இல்லாத பகுதிகளில் சில கட்டுப்பாட்டு தளர்வுகள் அந்தந்த மாநில அரசுகளால் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. 

அந்த வகையில் புதுச்சேரி அரசும் கடந்த வாரம் சில தளர்வுகளை அறிவித்தது. தொடர்ந்து, இன்று செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் நமச்சிவாயம் கூறியதாவது:

நாளை(திங்கள்) முதல் புதுச்சேரியில் மதுக்கடைகள் திறக்கப்படும். காலை 10 மணி முதல் இரவு 7 மணி வரை மதுக்கடைகள் திறந்திருக்கும். முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளி உள்ளிட்டவற்றை கடைப்பிடிக்க வேண்டும். மதுபானங்களை வாங்கிச் செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுக்கடைகளில் அமர்ந்து சாப்பிட அனுமதி இல்லை. வெளிமாநிலங்களில் இருந்து மது வாங்க யாரும் புதுச்சேரிக்கு வரக்கூடாது. 

மதுபானங்கள் மீது 25% வரை வரிகள் உயர்த்தப்பட்டுள்ளன. சாராயத்துக்கும் 20% வரை வரிகள் உயர்த்தப்பட்டுள்ளது. இது அடுத்த 3 மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com