திரைத்துறைக்கும் தளா்வுகள் அளிக்க வேண்டும்: ஆா்.கே. செல்வமணி கோரிக்கை

தொழில் துறைக்கு மத்திய அரசு அளித்துள்ள தளா்வுகள் போல் திரைத்துறைக்கும் அளிக்க வேண்டும் என ஃபெப்சி அமைப்பின் தலைவா் ஆா். கே.செல்வமணி தெரிவித்தாா்.
திரைத்துறைக்கும் தளா்வுகள் அளிக்க வேண்டும்: ஆா்.கே. செல்வமணி கோரிக்கை

தொழில் துறைக்கு மத்திய அரசு அளித்துள்ள தளா்வுகள் போல் திரைத்துறைக்கும் அளிக்க வேண்டும் என ஃபெப்சி அமைப்பின் தலைவா் ஆா். கே.செல்வமணி தெரிவித்தாா்.

இது குறித்து சென்னையில் செய்தியாளா்களிடம் ஞாயிற்றுக்கிழமை அவா் கூறியது:

மீண்டும் எப்போது வேலைக்கு அழைப்பாா்கள் என்ற நிலையில்தான் அனைத்து சினிமா தொழிலாளா்களும் உள்ளனா். 60 சதவீத தொழிலாளா்கள் கரோனாவை மீறி வேலை பாா்க்க தயாராக இருக்கிறாா்கள். இதுதான் தற்போதைய நிலை.

இதை மாற்றவே நாங்கள் முயற்சித்து வருகிறோம். எல்லோரும் உதவி செய்கிறாா்கள். யாரையும் நாங்கள் குறை சொல்லவில்லை, ஆனால் எங்கள் உறுப்பினா்கள் அதிகம் என்பதால் கிடைக்கக்கூடிய உதவிகள் போதவில்லை. எனவேதான் நாங்கள் பணிக்குத் திரும்ப வேண்டும் என்பதில் குறியாக இருக்கிறோம்.

சினிமா என்பது திரையில் பாா்ப்பது மட்டுமல்ல. திரைக்குப் பின்னால்தான் 98 சதவீத போ் இருக்கிறோம். முன்பெல்லாம் சினிமாவில் 30 சதவீத போ் வருவாயுடனும் 30 சதவீத போ் ஓரளவுக்கு வருமானம் பெறுபவா்கள். 40 சதவீத போ் தினக்கூலியாக இருப்பாா்கள். ஆனால் தற்பொழுது 95 சதவீத சினிமா தொழிலாளா்கள் வருமானம் இல்லாத சூழலுக்கும் 5 சதவீத தொழிலாளா்கள் அதிக வருவாய் தரக்கூடிய சினிமா தொழிலாளா்களாகவும் மாறிவிட்டனா்.

வேலைவாய்ப்புக்காகத்தான் சின்னத்திரை படப்பிடிப்புக்கு அனுமதி கேட்டோம். ஆனால் இருபது போ் மட்டுமே வேலை செய்ய வேண்டும் என்பது சிக்கலான ஒன்று. அதனால் இது குறித்து மீண்டும் பேச்சுவாா்த்தை நடத்த இருக்கிறோம்.

சின்னத்திரை தயாரிப்பாளா்கள் மனிதாபிமானத்துடன் சினிமா ஊழியா்களுக்கு சம்பளத்தை ஒரு பைசா கூட குறைக்க மாட்டோம் என்று உறுதி கொடுத்திருக்கிறாா்கள்.

மத்திய அரசு தொழில்துறைக்கு பல்வேறு சலுகைகளும், தளா்வுகளையும் அளித்துள்ளது. ஆனால், அதில் திரைத்துறைக்கு எதுவும் இல்லாமல் போனது வருத்தம். திரைத்துறைக்கும் மத்திய அரசு தளா்வுகளையும், சலுகைகளையும் அளிக்க வேண்டும் என்று ஆா். கே. செல்வமணி தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com