கரோனா பரிசோதனைக்காக 1.50 லட்சம் பிசிஆா் கருவிகள் தமிழகம் வருகை

கரோனா வைரஸ் பரிசோதனைக்காக 1.50 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்தன. 
கரோனா பரிசோதனைக்காக 1.50 லட்சம் பிசிஆா் கருவிகள் தமிழகம் வருகை

கரோனா வைரஸ் பரிசோதனைக்காக 1.50 லட்சம் பிசிஆர் கருவிகள் தமிழகம் வந்தடைந்தன. 

தமிழகத்தில் கரோனா வைரஸ் பரவல் கடந்தசில தினங்களாக தீவிரம் அடைந்து வருகிறது. அந்த வைரஸ் தொற்றால் 17 ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், சென்னையில் மட்டும் 10 ஆயிரத்தை தாண்டியுள்ளது. 

ஒருவருக்கு கரோனா தொற்று இருக்கிா, இல்லையா என்று பிசிஆா் பரிசோதனை மூலம் கண்டறியப்படுகிறது. இந்த நிலையில் கரோனா வைரஸ் பரிசோதனைக்காக 1.50 லட்சம் பிசிஆர் கருவிகள் தென்கொரியாவில் இருந்து தமிழகம் வந்தடைந்தன. 

இப்பிசிஆர் கருவிகள் மூலம் சோதனையை மேலும் விரைவுபடுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. தமிழகத்தில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருவதால், கடந்த மாதம் 11 லட்சம் பிசிஆா் கருவிகளை கொள்முதல் செய்ய தமிழக அரசு முடிவு எடுத்தது. 

ஏற்கெனவே 2 லட்சம் கருவிகள் தமிழகம் வந்துள்ள நிலையில் தற்போது மேலும் 1.50 லட்சம் பிசிஆா் கருவிகள் வந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com