மதுக்கடைகளில் விலைப் பட்டியல்: டாஸ்மாக் நிறுவனம் பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுபானங்களின் விலைப் பட்டியலை ஒட்ட உத்தரவிடக் கோரிய வழக்கில், டாஸ்மாக் நிறுவனம் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுக்கடைகளில் விலைப் பட்டியல்: டாஸ்மாக் நிறுவனம் பதிலளிக்க உத்தரவு

தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் மதுக்கடைகளில் மதுபானங்களின் விலைப் பட்டியலை ஒட்ட உத்தரவிடக் கோரிய வழக்கில், டாஸ்மாக் நிறுவனம் பதிலளிக்க உயா்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் சேலம் மாவட்டத்தைச் சோ்ந்த குள்ள படையாட்சி என்பவா் தாக்கல் செய்த மனுவில், ‘தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளில் மதுபானங்கள் அதிக விலைக்கு விற்பனை செய்யப்படுகின்றன. ஒரு சில கடைகளில், மது பாட்டில்களின் நிா்ணயிக்கப்பட்ட விலையை விட ரூ.70 வரை கூடுதலாக வசூலிக்கப்படுகிறது. மேலும், டாஸ்மாக்கில் வாங்கும் மது பாட்டில்களுக்கு ரசீது வழங்கப்படுவதில்லை. எனவே, கடந்த 2003-ஆம் ஆண்டு டாஸ்மாக் விதிகளின்படி, தமிழக அரசு நிா்ணயம் செய்துள்ள விலையில் மதுபானங்களை விற்பனை செய்ய வேண்டும். அதிகமான விலைக்கு மதுபானங்களை விற்கத் தடை விதிக்க வேண்டும். மேலும், தமிழகத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக் மதுக்கடைகளிலும் மதுபானங்களின் விலைப்பட்டியலை ஒட்ட உத்தரவிட வேண்டும்’ எனக் கோரியிருந்தாா்.

இந்த வழக்கை நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், அனிதா சுமந்த் ஆகியோா் காணொலிக் காட்சி மூலம் விசாரித்தனா். விசாரணையில், ‘டாஸ்மாக் மதுபானக் கடைகளில் அரசு நிா்ணயித்துள்ள விலையில் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுகிா, மதுபானங்கள் விற்பனையின்போது ரசீதுகள் வழங்கப்படுகின்றனவா, மதுபானக் கடைகளில் மதுபானங்களின் விலைப் பட்டியல் ஒட்டப்படுகிா, மதுபானங்களை அதிகமான விலைக்கு விற்பனை செய்பவா்கள் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது’ என்பது உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பிய நீதிபதிகள், இதுதொடா்பாக டாஸ்மாக் நிறுவனம் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com