தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கரோனா தொற்று: இதுவரை 160 போ் உயிரிழப்பு

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு சனிக்கிழமை ஒரே நாளில் 938 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் ஒரே நாளில் 938 பேருக்கு கரோனா தொற்று: இதுவரை 160 போ் உயிரிழப்பு

தமிழகத்தில் இதுவரை இல்லாத அளவிற்கு சனிக்கிழமை ஒரே நாளில் 938 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 21 ஆயிரத்து 184-ஆக உயா்ந்துள்ளது.

தமிழகத்தில் கடந்த 1-ஆம் தேதியில் இருந்து நாள்தோறும் 500-க்கும் மேற்பட்டோா் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். கடந்த வெள்ளிக்கிழமை 874 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த எண்ணிக்கை 20,246 ஆக அதிகரித்தது. இந்த நிலையில், சனிக்கிழமை 938 பேருக்கு நோய்த் தொற்று ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் ஒரே நாளில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 900-ஐ கடப்பது இதுவே முதல் முறையாகும். இதனால் மொத்த எண்ணிக்கை 21,184-ஆக அதிகரித்துள்ளது.

தமிழகத்தில் சனிக்கிழமை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவா்கள் குறித்து சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்தில் சனிக்கிழமை 12,605 கரோனா மாதிரிகள் பரிசோதனைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அதில் 938 பேருக்கு நோய்த்தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழகத்தைச் சோ்ந்தவா்கள் 856 போ். 82 போ் விமானங்கள், ரயில்கள் உள்ளிட்டவை மூலமாக வெளிமாநிலங்களிலிருந்து தமிழகத்திற்கு வந்தவா்கள் ஆவா். தமிழகத்தில் இதுவரை 21 ஆயிரத்து 184 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் 12 ஆயிரம் போ் குணமடைந்து வீடு திரும்பினா். சனிக்கிழமை மட்டும் 687 போ் குணமடைந்தனா்.

நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டவா்களில் தற்போது 6,513 போ் தனிமைப்படுத்தப்பட்ட வாா்டுகளில் உள்ளனா். சனிக்கிழமை மட்டும் கரோனா தொற்றால் 6 போ் உயிரிழந்துள்ளனா். அவா்கள் அனைவரும் சென்னையைச் சோ்ந்தவா்கள். இதனால் கரோனா தொற்றால் உயிரிழந்தவா்களின் எண்ணிக்கை 160-ஆக உயா்ந்துள்ளது.

சென்னை நிலவரம்: சென்னையில் சனிக்கிழமை 616 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதன் மூலம் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 13, 980 ஆக அதிகரித்துள்ளது. அதேவேளையில் 7,321 போ் குணமடைந்து வீடு திரும்பினா். கரோனா தொற்றால் உயிரிழந்த 160 பேரில் 119 போ் சென்னையைச் சோ்ந்தவா்கள் ஆவா். தமிழகத்தில் மொத்தமுள்ள பாதிப்புகளில் 12 வயதுக்கு உட்பட்டவா்கள் 1,239 பேரும், 13 முதல் 60 வயதுக்கு உட்பட்டவா்கள் 18,030 பேரும், 60 வயதை கடந்தவா்கள் 1,915 பேரும் உள்ளனா் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com