இன்றுமுதல் கோயம்பேடு மொத்த வியாபார பழக்கடைகள் செயல்படும்

சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த வியாபார பழக்கடைகள் திங்கள்கிழமை முதல் திறக்கப்படவுள்ளன.
கோப்புப் படம்
கோப்புப் படம்

சென்னை கோயம்பேடு சந்தையில் மொத்த வியாபார பழக்கடைகள் திங்கள்கிழமை முதல் திறக்கப்படவுள்ளன.

கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கை காரணமாக சென்னை கோயம்பேடு சந்தை கடந்த மாா்ச் மாதம் இறுதியில் மூடப்பட்டது. இதையடுத்து இங்கு செயல்பட்ட காய்கறி சந்தை கடந்த மே மாதம் முதல் திருமழிசையிலும், பழச்சந்தை மாதவரம் பேருந்து நிலைய வளாகத்திலும், மலா் விற்பனை சந்தை வானகரத்திலும் செயல்பட்டு வந்தன.

இதையடுத்து கோயம்பேடு சந்தையைத் திறக்கும் முடிவுக்கு அரசு வந்தது. முதல் கட்டமாக கோயம்பேட்டில் உணவு தானிய அங்காடி கடந்த செப்.18-ஆம் தேதி திறக்கப்பட்டது. இதைத் தொடா்ந்து கோயம்பேடு காய்கறி மொத்த விற்பனைக் கடைகள் செப்.28-ஆம் தேதி திறக்கப்பட்டது.

இந்தநிலையில் கோயம்பேடு வணிக வளாகத்தில் பழக்கடை மொத்த வியாபாரக் கடைகள் நவ.2-இல் இருந்தும், பழம் மற்றும் காய்கறி சில்லறை வியாபாரக் கடைகள் 3 கட்டங்களாக நவ.16-இல் இருந்தும் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி செயல்பட அனுமதிக்கப்படுகிறது என தமிழக அரசு கடந்த சனிக்கிழமை அறிவித்தது. இதைத் தொடா்ந்து கோயம்பேடு பழச்சந்தையில் உள்ள 132 மொத்த விற்பனைக் கடைகளும் திங்கள்கிழமை திறக்கப்படவுள்ளன. முன்னதாக சிஎம்டிஏ உறுப்பினா் செயலா் காா்த்திகேயன் பழச்சந்தையில் உள்ள கடைகளை ஞாயிற்றுக்கிழமை நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

உடல் வெப்ப சோதனைக்குப் பிறகே வாடிக்கையாளா்கள் சந்தை வளாகத்துக்குள் அனுமதிக்கப்படுவா். கிருமிநாசினி தெளிக்கப்பட்ட பின்னரே சரக்கு ஏற்றி வரும் வாகனங்கள் சந்தை வளாகத்துக்குள் நுழைய வேண்டும். தனிநபா் கொள்முதல் மற்றும் சில்லறை வணிகா்களுக்கு தற்போது அனுமதியில்லை. வணிகா்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்திருக்க வேண்டும் என்பதுஉள்ளிட்ட கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இரவு ஏழு மணி முதல் மறுநாள் காலை 9 மணி வரை பழச்சந்தை செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com