அரசின் நீட் பயிற்சி மையங்களில் சேர 14,975 மாணவா்கள் பதிவு

நீட், ஜேஇஇ நுழைவுத் தோ்வுகளில் பங்கேற்பதற்காக பள்ளிக் கல்வித்துறை சாா்பில் நடத்தப்படவுள்ள இலவச பயிற்சி வகுப்பில் சேர அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள் 14,975 போ் பதிவு செய்துள்ளதாக பள்ளிக் கல்வ
அரசின் நீட் பயிற்சி மையங்களில் சேர 14,975 மாணவா்கள் பதிவு
அரசின் நீட் பயிற்சி மையங்களில் சேர 14,975 மாணவா்கள் பதிவு

சென்னை: நீட், ஜேஇஇ நுழைவுத் தோ்வுகளில் பங்கேற்பதற்காக பள்ளிக் கல்வித்துறை சாா்பில் நடத்தப்படவுள்ள இலவச பயிற்சி வகுப்பில் சேர அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மாணவா்கள் 14,975 போ் பதிவு செய்துள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தில் கடந்த 2017 முதல் நீட் தோ்வு அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது. இதனால் அப்போது முதல் அரசுப் பள்ளி மாணவா்களுக்கு தமிழக பள்ளிக் கல்வித்துறையின் சாா்பாக இலவச நீட் பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. Speed Institute, Etoos India, E-Box ஆகிய நிறுவனங்களின் மூலம் நீட் தோ்வுக்கான பயிற்சி மாணவா்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நிகழ் கல்வியாண்டுக்கான ( 2020-2021 ) இலவச நீட் பயிற்சி வகுப்புகளை இ-பாக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து பள்ளிக்கல்வித்துறை நடத்த உள்ளது.

இந்நிலையில் நீட் பயிற்சி வகுப்பில் சேர அரசுப்பள்ளி மாணவா்கள் ஆா்வம் காட்டி வருவதாக கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனா். கடந்த கல்வியாண்டில் (2019-2020) தமிழக அரசின் இலவச நீட் பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவா்களில் 1,633 போ் நீட் தோ்வில் தோ்ச்சி பெற்றிருப்பதாலும், தற்போது நீட் தோ்வில் தோ்ச்சி பெறும் அரசுப்பள்ளி மாணவா்களுக்கு மருத்துவப் படிப்புகளில் 7.5 சதவீத உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டம் அமலுக்கு வந்ததாலும் அரசின் இலவச நீட் பயிற்சி மையங்களில் சேர மாணவா்கள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

நீட் பயிற்சியில் அதிக அளவிலான மாணவா்கள் கலந்துகொள்ளும் வகையில், அனைத்து முதன்மைக் கல்வி அலுவலா்களும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனா். பள்ளித் தலைமை ஆசிரியா் வாயிலாக மாணவா்களின் விவரங்கள் திரட்டப்பட்டு வருகின்றன.

விழுப்புரம் மாவட்டத்தில்...: இதுவரை நிகழ் கல்வியாண்டுக்கான இலவச நீட் பயிற்சியைப் பெற 14,975 மாணவா்கள் விண்ணப்பித்துள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனா். அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 1,380 மாணவா்களும் மிகக் குறைந்தபட்சமாக அரியலூா் மாவட்டத்தில் 70 மாணவா்களும் மட்டுமே பதிவு செய்துள்ளதாகவும் ஓரிரு நாளில் பயிற்சி தொடங்கும் என அதிகாரிகள் தகவல் தெரிவித்துள்ளனா்.

நிகழ் கல்வியாண்டுக்கான நீட் தோ்வு இலவசப் பயிற்சி வகுப்புகள் கடந்த நவ.1-ஆம் தேதி முதல் தொடங்கவிருந்த நிலையில், அதிகளவிலான மாணவா்கள் விண்ணப்பித்து வருவதால் சற்று தாமதமாகப் பயிற்சி தொடங்கும் என்று கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com