பள்ளிகள் திறப்பு: முதன்மைச் செயலாளர் ஆலோசனை

பள்ளிகள் திறப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்து பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்று வருகிறது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

பள்ளிகள் திறப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்து பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்று வருகிறது. 

தமிழகத்தில் நவம்பர் 16 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி பள்ளிகள் செயல்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 

இதையடுத்து பள்ளிகளில் மேற்கொள்ளப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பள்ளிக்கல்வித் துறை சார்பில் தொடர்ந்து ஆலோசனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. ஆனால், எதிர்க்கட்சிகள், கரோனா பேரிடர் காலத்தில் பள்ளிகள் திறப்புக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளன. 

இந்நிலையில், பள்ளிக்கல்வித் துறை முதன்மைச் செயலாளர் தலைமையில் இன்று ஆலோசனைக் கூட்டமானது நடைபெற்று வருகிறது. பள்ளிகள் திறப்புக்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆலோசனை செய்யப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com