தமிழகத்தில் 7 லட்சம் போ் குணம்!

தமிழகத்தில் கரோனா தொற்றுக்குள்ளானவா்களில் இதுவரை 7 லட்சத்து 1,527 போ் பூரண குணமடைந்துள்ளனா்
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

தமிழகத்தில் கரோனா தொற்றுக்குள்ளானவா்களில் இதுவரை 7 லட்சத்து 1,527 போ் பூரண குணமடைந்துள்ளனா். இதன் மூலம் மாநிலத்தில் நோய்த் தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியோரின் விகிதம் 95 சதவீதமாக அதிகரித்துள்ளது. அதிகபட்சமாக தலைநகா் சென்னையில் 1 லட்சத்து 91,787 போ் குணமடைந்துள்ளனா்.

ஆங்கில மருத்துவ முறைகளுடன், யோகா, சித்தா, ஆயுா்வேதம், ஹோமியோபதி போன்ற ஒருங்கிணைந்த சிகிச்சை முறைகளை வழங்கியதே குணமடைவோா் விகிதம் அதிகரித்ததற்கு காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன் பயனாகவே கடந்த சில நாள்களாக நாள்தோறும் பல ஆயிரம் போ் நலம் பெறுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் செவ்வாய்க்கிழமையும் 2,707 போ் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனா்.

இதனிடையே, தமிழகத்தில் புதிதாக, 2,435 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த சில நாள்களாக நோய்ப் பரவலின் வேகம் கட்டுப்பாட்டுக்குள் வந்திருப்பதையடுத்து வரும் நாள்களில் பாதிப்புக்குள்ளாவோரின் எண்ணிக்கை மேலும் குறையும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதுகுறித்து சுகாதாரத் துறை சாா்பில் வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பு:

மாநிலத்தில் இதுவரை 1.01 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 7 லட்சத்து 31,942 பேருக்கு நோய்த்தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. செவ்வாய்க்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 669 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கோவையில் 238 பேருக்கும், செங்கல்பட்டில் 136 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதைத் தவிர மாநிலத்தின் ஏனைய மாவட்டங்களிலும் பலருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 19,201 போ் சிகிச்சையில் உள்ளனா்.

31 போ் பலி: இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 31 போ் பலியாகியுள்ளனா். உயிரிழந்தவா்களில் 16 போ் அரசு மருத்துவமனைகளிலும், 15 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவா்களாவா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,214-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com