சங்ககிரி ஒன்றியத்தில் புதிய சாலைகள் அமைக்கப் பூமி பூஜை

சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட ஊராட்சிகளில் ரூ.2.12 கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிகளுக்குப் பூமி பூஜை அந்தந்த ஊராட்சிகளில் புதன்கிழமை நடைபெற்றது. 
புதிய கட்டிடத்தை திறந்துவைத்து பார்வையிடுகின்றனர் சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜா, தேவூர் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் கே.வெங்கடாஜலம். 
புதிய கட்டிடத்தை திறந்துவைத்து பார்வையிடுகின்றனர் சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜா, தேவூர் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவர் கே.வெங்கடாஜலம். 

சேலம் மாவட்டம், சங்ககிரி ஊராட்சி ஒன்றியத்திற்குள்பட்ட சின்னாகவுண்டனூர், ஐவேலி, கோட்டவரதம்பட்டி, மோரூர்கிழக்கு, மேற்கு ஆகிய ஊராட்சிகளில் ரூ.2.12 கோடி மதிப்பீட்டில் புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிகளுக்குப் பூமி பூஜை அந்தந்த ஊராட்சிகளில் புதன்கிழமை நடைபெற்றது. 

சங்ககிரி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜா, தேவூர் அரசு மேல்நிலைப்பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழகத்தலைவரும் அதிமுக சேலம் புறநகர் மாவட்ட நிர்வாகியுமான கே.வெங்கடாஜலம் ஆகியோர் தலைமை வகித்து சின்னாகவுண்டனூர் ஊராட்சியில் சின்னாகவுண்டனூர் முதல் முனியப்பனூர் வரை ரூ.20 லட்சத்தில் தார் சாலை அமைத்தல், ஐவேலி ஊராட்சியில் மாவெலிபாளையத்தில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டிலும், கோட்டவரதம்பட்டி ஊராட்சியில்  ஆவரங்கம்பாளையம் முதல் வளைய செட்டிப்பாளையம் வரை ரூ.38 லட்சம் மதிப்பீட்டிலும், அதே ஊராட்சியில் வளையசெட்டிபாளையத்தில் ரூ.48 லட்சம் மதிப்பீட்டிலும், மோரூர் கிழக்கு ஊராட்சியில் திருவாண்டிப்பட்டி சாலை முதல் ராஜபாளையம் வரை ரூ.46 லட்சம் மதிப்பீட்டிலும், மோரூர் மேற்கு ஊராட்சியில் தண்ணீர்ப்பந்தல் பாளையம் பகுதியில் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்கும் பணிகளுக்குப் பூமி பூஜை செய்து அடிக்கல் நாட்டித் தொடக்கி வைத்தனர். 

முன்னதாக தேவண்ணகவுண்டனூர் ஊராட்சியில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் புதிதாகக் கட்டப்பட்ட ஊராட்சி மன்ற அலுவலகத்தைத் திறந்து வைத்துப் பார்வையிட்டனர். 

சங்ககிரி ஊராட்சி ஒன்றியக்குழுத்தலைவி எம்.மகேஸ்வரி, ஊராட்சி ஒன்றிய ஆணையாளர் என்.எஸ்.ரவிச்சந்திரன், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் ஏ.பி.சிவக்குமாரன், அதிமுக ஒன்றிய செயலர்கள் கிழக்கு என்.சி.ஆர்.ரத்தினம், மேற்கு சுந்தரராஜன், விவசாய அணி செயலர் ராமசாமி, தேவண்ணகவுண்டனூர் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் கே.குமார், மஞ்சக்கல்பட்டி அதிமுக கிளைச் செயலர் சின்னண்ணன் உள்ளிட்ட பலர் இதில் கலந்து கொண்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com