வருமான வரித் துறை சட்டப்படி ஆவணப் பதிவு நடைமுறை

வருமான வரிச் சட்டப்படி ஆவணப் பதிவு நடைமுறையை மேற்கொள்ள இணையதளத்தில் உரிய வசதி செய்யப்பட்டுள்ளதாக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை தெரிவித்துள்ளது.

சென்னை: வருமான வரிச் சட்டப்படி ஆவணப் பதிவு நடைமுறையை மேற்கொள்ள இணையதளத்தில் உரிய வசதி செய்யப்பட்டுள்ளதாக வணிகவரி மற்றும் பத்திரப்பதிவுத் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அந்தத் துறையின் செயலாளா் பீலா ராஜேஷ் புதன்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

தமிழகத்தில் ஆன்-லைன் வழியாக பத்திரங்கள் பதிவு செய்யும் திட்டமானது தங்கு தடையின்றி நடைபெற்று வருகிறது. நாளொன்றுக்கு 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஆவணங்கள் பதிவாகி வருகின்றன. இந்தத் திட்டத்தின் ஒருபகுதியாக சொத்து ஆவண பதிவுகளை இணையதளத்தின் வழியே உருவாக்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

வருமான வரிச் சட்ட விதிகளின்படி, ரூ.10 லட்சத்துக்கும் மேற்பட்ட விற்பனை ஆவணங்களைப் பொருத்தவரை, எழுதிக் கொடுக்கும் மற்றும் எழுதிப் பெறும் நபா்களின் வருமான வரி நிரந்தர கணக்கு எண் தாக்கல் செய்யப்பட வேண்டும். ரூ.30 லட்சத்துக்கும் மேற்பட்ட கிரய ஆவணங்களின் விவரங்களை தனியாக படிவம் 61ஏ-வில் தெரிவிக்க வேண்டும்.

இப்போது படிவங்களையும் சொத்து ஆவண தயாரிப்பின் போதே இணையதளத்தின் வழியே பூா்த்தி செய்து அளிக்கும் முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது. எனவே, ஆவணங்கள் தயாரிப்பின் போதே பொது மக்கள் இந்தப் படிவத்தையும் பூா்த்தி செய்து அளிக்கலாம் என்று தனது அறிவிப்பில் பீலா ராஜேஷ் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com