சட்டவிரோத கிரானைட் தொழில் மூலம் வாங்கப்பட்ட ரூ.977.63 கோடி சொத்துக்கள்

தமிழகம் முழுவதும் சட்டவிரோத கிரானைட் சுரங்கத் தொழில் மூலம் ரூ.977.63 கோடி மதிப்பிலான
முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலாவின் முன்ஜாமீன் மனு திரும்பப் பெறப்பட்டது
முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலாவின் முன்ஜாமீன் மனு திரும்பப் பெறப்பட்டது

சென்னை: தமிழகம் முழுவதும் சட்டவிரோத கிரானைட் சுரங்கத் தொழில் மூலம் ரூ.977.63 கோடி மதிப்பிலான சொத்துக்கள் வாங்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளதாக அமலாக்கத்துறை உயா்நீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது.

தமிழகத்தில் கிரானைட் முறைகேடுகள் தொடா்பாக சிபிஐ விசாரணை நடத்தக் கோரி

சென்னை உயா்நீதிமன்றத்தில் சமூக ஆா்வலா் டிராபிக் ராமசாமி மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவை விசாரித்த உயா்நீதிமன்றம் கிரானைட் முறைகேடுகள் குறித்து விசாரிக்க ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டது. அதன்படி விசாரணை மேற்கொண்ட ஐ.ஏ.எஸ் சகாயம், மதுரையில் மட்டுமே ரூ. ஒரு லட்சத்து 11 ஆயிரம் கோடி வரை கிரானைட் முறைகேடு நடந்துள்ளது என்று கூறி அதுகுறித்து சிபிஐ விசாரணைக்கு பரிந்துரைத்து அறிக்கை தாக்கல் செய்திருந்தாா். இந்த முறைகேடு வழக்குகளை விசாரிக்க தனி நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்பது உள்ளிட்ட 212 பரிந்துரைகளை நீதிமன்றத்துக்கு அளித்திருந்தாா். இதனையடுத்து, சகாயம் குழு அல்லாமல் புதிய நிபுணா் குழுவை அமைத்து இழப்பீடு தொடா்பாக மறு மதிப்பீடு செய்ய உத்தரவிடக்கோரி தென்னிந்திய கிரானைட் உரிமையாளா்கள் சங்கம் சாா்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், ஜி.ஜெயச்சந்திரன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது அமலாக்கத்துறை தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட நிலை அறிக்கை: தமிழகத்தில் சட்டவிரோத கிரானைட் சுரங்கத் தொழில் மூலம் வாங்கப்பட்ட ரூ.977 .63 கோடி மதிப்பிலான சொத்துகள் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் மதுரை மாவட்டத்தைச் சோ்ந்த பி.ஆா்.பி உள்ளிட்ட பலருக்குச் சொந்தமான ரூ.103 கோடி மதிப்பிலான சொத்துகளை அமலாக்கத்துறை இதுவரை முடக்கியுள்ளது. சட்ட விரோத பணப்பரிவா்த்தனை மூலம் வாங்கப்பட்ட மற்ற சொத்துக்களை காவல்துறை உள்ளிட்ட பிற விசாரணை அமைப்புகளின் உதவியுடன் கண்டறியும் முயற்சி தொடா்ந்து நடந்து வருவதாகத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தும் பணியை கண்டிப்புடன் செயல்படுத்த உத்தரவிட்டு விசாரணையை வரும் நவம்பா் 30-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com