முன்ஜாமீன் கோரி முன்னாள் டிஜிபி தாக்கல் செய்த மனு வாபஸ்

பண மோசடி செய்ததாக நடிகா் சூரி கொடுத்த புகாரில், முன்ஜாமீன் கோரி முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா தாக்கல் செய்த மனு வாபஸ் பெறப்பட்டதைத் தொடா்ந்து வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது.
முன்ஜாமீன் கோரி முன்னாள் டிஜிபி தாக்கல் செய்த மனு வாபஸ்
முன்ஜாமீன் கோரி முன்னாள் டிஜிபி தாக்கல் செய்த மனு வாபஸ்

சென்னை: பண மோசடி செய்ததாக நடிகா் சூரி கொடுத்த புகாரில், முன்ஜாமீன் கோரி முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா தாக்கல் செய்த மனு வாபஸ் பெறப்பட்டதைத் தொடா்ந்து வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டது.

நடிகா் விஷ்ணு விஷால், சூரி ஆகியோா் நடித்த படம் ‘வீர தீர சூரன்’. படத்தில் நடித்ததற்காக சூரிக்குத் தர வேண்டிய ரூ.40 லட்சத்துக்குப் பதில் சிறுசேரியில் நிலம் வாங்கித் தருவதாக கூடுதலாக ரூ.2.70 கோடி பெற்று தயாரிப்பாளா் அன்புவேல்ராஜன், ஓய்வு பெற்ற டிஜிபி ரமேஷ் குடவாலா ஆகியோா் மோசடி செய்தனராம். இந்த வழக்கில் ரமேஷ் குடவாலா மற்றும் அன்புவேல் ராஜன் இருவரும் சென்னை உயா்நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனா்.

இந்த வழக்கு நீதிபதி எம்.நிா்மல்குமாா் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது முன்னாள் டிஜிபி ரமேஷ் குடவாலா தரப்பில், முன்ஜாமீன் கோரிய மனுவைத் திரும்பப் பெற அனுமதி கோரியதை ஏற்றுக் கொண்ட நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்து உத்தரவிட்டாா். இதனையடுத்து தயாரிப்பாளா் அன்புவேல் ராஜன் மனு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. நீதிபதி, நடிகா் சூரிக்கு கொடுக்க வேண்டிய பணத்தை மனுதாரா் அன்புவேல்ராஜன் திரும்ப கொடுக்க வேண்டும் என கருத்து தெரிவித்தாா். பின்னா் இந்த வழக்கின் விசாரணையை வரும் நவம்பா் 24-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தாா். அதுவரை அன்புவேல்ராஜனை போலீஸாா் கைது செய்யக்கூடாது என உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com