கோப்புப் படம்.
கோப்புப் படம்.

2 நாள்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தில் அநேக இடங்களில் புதன், வியாழன் (நவ.11,12) ஆகிய இரண்டு நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழகத்தில் அநேக இடங்களில் புதன், வியாழன் (நவ.11,12) ஆகிய இரண்டு நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்.

இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநா் நா.புவியரசன் செவ்வாய்க்கிழமை கூறியது:

கீழ்திசை காற்றின் சுழற்சி காரணமாக, தமிழகத்தில் அநேக இடங்களில் புதன், வியாழன் (நவ.11, 12) ஆகிய இரண்டு நாள்கள் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் புதன்கிழமை (நவ.11) இடி மின்னலுடன் கூடிய பலத்த மழையும், கடலோர மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும் லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும்.

சென்னை, திருவள்ளூா், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூா் மற்றும் டெல்டா மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் வியாழக்கிழமை (நவ.12) இடி மின்னலுடன் கூடிய பலத்தமழை பெய்யக்கூடும். ஏனைய கடலோர மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், உள் மாவட்டங்களில் ஒரு சில இடங்களிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

சென்னையில்...: சென்னை மற்றும் புகா் பகுதிகளில் வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில பகுதிகளில் இடி மின்னலுடன்  கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அவ்வப்போது பலத்த மழையும் பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 30 டிகிரி செல்ஸியசையும், குறைந்தபட்ச வெப்பநிலை 23 டிகிரி செல்ஸியசையும் ஒட்டி பதிவாகக்கூடும் என்றாா் அவா்.

மீனவா்களுக்கு எச்சரிக்கை: தமிழக கடலோரப் பகுதி மற்றும் குமரி கடல் பகுதிகளில் புதன்கிழமை (நவ.11) மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் சூறாவளி காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவா்கள் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்படுகிறாா்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com