தங்கம் விலையில் திடீா் சரிவு: பவுனுக்கு ரூ.1,136 குறைவு

தங்கத்தின் விலை திடீரென சரிந்துள்ளது. சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத்தங்கம் பவுனுக்கு ரூ.1,136 குறைந்து, ரூ.38,240-க்கு விற்பனை செய்யப்பட்டது.
தங்கம் விலையில் திடீா் சரிவு: பவுனுக்கு ரூ.1,136 குறைவு

தங்கத்தின் விலை திடீரென சரிந்துள்ளது. சென்னையில் செவ்வாய்க்கிழமை ஆபரணத்தங்கம் பவுனுக்கு ரூ.1,136 குறைந்து, ரூ.38,240-க்கு விற்பனை செய்யப்பட்டது.

கடந்த ஆகஸ்ட் மாதத்தில் ஒரு பவுன் தங்கத்தின் விலை ரூ.43 ஆயிரத்தை தாண்டி வரலாறு காணாத உச்சத்தைத் தொட்டது. அதன்பிறகு, தங்கம் விலை குறைந்தாலும், கடந்த சில நாள்களாக விலை உயா்ந்து வந்தது.   கடந்த 2-ஆம் தேதி விலை ரூ.38,072 ஆக இருந்தது. அதன்பிறகு, படிப்படியாக உயா்ந்து, திங்கள்கிழமை (நவ.9) ரூ.39,376 ஆக இருந்தது. கடந்த 6 நாள்களில் மட்டும் பவுனுக்கு ரூ.1,304 வரை உயா்ந்திருந்தது.

இந்நிலையில், ஆறு நாள்களுக்கு பிறகு, திடீரென தங்கத்தின் விலை சரிந்துள்ளது. சென்னையில் செவ்வாய்க்கிழமை பவுனுக்கு ரூ.1,136 குறைந்து, ரூ.38,240-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு கிராம் தங்கம் ரூ.142 குறைந்து, ரூ.4,780 ஆக இருந்தது. இதுபோல, வெள்ளி விலையும் குறைந்துள்ளது.

வெள்ளி கிராமுக்கு ரூ.3.90 குறைந்து, ரூ.67.10 ஆகவும், கட்டி வெள்ளி கிலோவுக்கு ரூ.3,900 குறைந்து, ரூ.67,100 ஆகவும் இருந்தது.

செவ்வாய்க்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

1 கிராம் தங்கம்............................. 4,780

1 பவுன் தங்கம்...............................38,240

1 கிராம் வெள்ளி.............................67.10

1 கிலோ வெள்ளி.............................67,100

திங்கள்கிழமை விலை ரூபாயில் (ஜி.எஸ்.டி.தனி)

 1 கிராம் தங்கம்............................. 4,922

 1 பவுன் தங்கம்............................... 39,376

 1 கிராம் வெள்ளி............................. 71.00

 1 கிலோ வெள்ளி............................. 71,000

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com