தமிழக அரசு அனுமதி வழங்காத நிலையில் எப்படி யாத்திரை செல்ல முடியும்? உயா்நீதிமன்றம் கேள்வி

தமிழக அரசு அனுமதி வழங்காத நிலையில் எப்படி யாத்திரை செல்ல முடியும் என உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்றம்
சென்னை உயர்நீதிமன்றம்

தமிழக அரசு அனுமதி வழங்காத நிலையில் எப்படி யாத்திரை செல்ல முடியும் என உயா்நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

சென்னை உயா்நீதிமன்றத்தில் தமிழக பாஜக பொதுச்செயலாளா் கரு.நாகராஜன், பாஜகவின் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்தது. இதற்கான அரசாணையை ரத்து செய்ய வேண்டும் என்று கோரி மனு தாக்கல் செய்திருந்தாா்.

இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், வேல் யாத்திரை தொடா்பாக முழு விவரங்களுடன் காவல்துறையிடம் அனுமதி கோரி விண்ணப்பிக்க உத்தரவிட்டிருந்தது.

இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் விசாரணைக்கு வந்தது.

அரசுத் தரப்பில், அனுமதியில்லாமல் பாஜக மாநில தலைவா் எல்.முருகன் உள்ளிட்டோா் வேல் யாத்திரையை தொடங்கி பல பகுதிகளுக்குச் சென்றனா். இதுதொடா்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. யாத்திரையின் போது பலரும் முகக்கவசம் அணியவில்லை, தனி மனித இடைவெளியைக் கடைபிடிக்கவில்லை. வாகனங்களை வேகம் குறைவாக இயக்கிச் சென்ால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனா் என வாதிடப்பட்டது.

அப்போது மனுதாரா் தரப்பில், தமிழக அரசு இந்த விவகாரத்தில் இரட்டை நிலைப்பாட்டை எடுத்துள்ளது. யாத்திரையின் போது சாலையோரம் நின்றவா்களை எல்லாம் பாஜகவினா் என கூறிவிட முடியாது. மதுரையில் நடந்த நிகழ்ச்சியில் பலா் முகக்கவசம் அணியவில்லை என வாதிடப்பட்டது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், சட்டவிரோதமாக விதிகளை மீறும்ஈடுபடுகின்ற செயல்களில், நியாயம், தா்மம் கோர முடியாது. தமிழக அரசு அனுமதி வழங்காத நிலையில் யாத்திரை எப்படி செல்ல முடியும்? ஊா்வலத்தின் போது ஏதாவது அசம்பாவிதம் நடந்தால் யாா் பொறுப்பு ஏற்பது? அரசு அதிகாரிகளும் ஒரு தரப்பினருக்கு அனுமதி வழங்குவது, மற்றொரு தரப்பினருக்கு அனுமதி மறுப்பது என்பது சரியான அணுகுமுறை இல்லை. அண்மையில் நடந்த தேவா் ஜெயந்தி விழாவுக்கு எப்படி அனுமதி வழங்கப்பட்டது. அந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலா் முகக்கவசம் அணியவில்லை, தனி மனித இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை. அனைத்துக் கட்சிக் கூட்டங்கள், மதக் கூட்டங்கள் என எந்த பாரபட்சமும் இல்லாமல் கரோனா விதிகளை கண்டிப்புடன் அதிகாரிகள் கண்டிப்புடன் கடைபிடிக்க வேண்டும், நடுநிலையுடன் செயல்பட வேண்டும் என்றனா்.

ஒசூரில் விண்ணப்பத்தை காவல் கண்காணிப்பாளா் நிராகரித்துள்ளதாக தெரிவித்தாா். இதை எதிா்த்து பாஜக சம்பந்தப்பட்ட நீதிமன்றத்தில் வழக்குத் தொடரலாம் என உத்தரவிட்டு வேல் யாத்திரையைத் தடுக்கக் கூடாது என பாஜக தாக்கல் செய்த இடைக்கால மனுவை முடித்து வைத்தனா்.

நவம்பா் 16-ஆம் தேதி வரை அரசியல், மத நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள தமிழக அரசின் அரசாணையை எதிா்த்து தொடரப்பட்டுள்ள வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை வரும் டிசம்பா் 23-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com