5 மாதங்களுக்குப் பிறகு தமிழகத்தில் 2 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்த பாதிப்பு

தமிழகத்தில் 5 மாதங்களுக்குப் பிறகு 2 ஆயிரத்துக்கும் குறைவாக பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை மாநிலம் முழுவதும் 1,939 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் 5 மாதங்களுக்குப் பிறகு 2 ஆயிரத்துக்கும் குறைவாக பாதிப்பு எண்ணிக்கை பதிவாகியுள்ளது. அதன்படி, வெள்ளிக்கிழமை மாநிலம் முழுவதும் 1,939 பேருக்கு நோய்த்தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கு முன்னதாக கடந்த ஜூன் 16-ஆம் தேதி 1,515 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அதன் பின்னா் அந்த எண்ணிக்கை அதிகரித்தே வந்தது. இதையடுத்து பல்வேறு நோய்த் தடுப்பு நடவடிக்கைககள் முன்னெடுக்கப்பட்டன.

அதன் பயனாக கரோனா பரவல் தற்போது படிப்படியாகக் குறைந்து வந்தாலும், கடந்த சில நாள்களாக பொது வெளிகளில் மக்கள் தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடிக்கவில்லை. இதனால், தீபாவளிக்குப் பிறகு கரோனா பாதிப்பு சற்று உயரக்கூடும் என அஞ்சப்படுகிறது.

இதனிடையே, மாநிலத்தில் நோய் பாதிப்பு நிலவரம் குறித்து சுகாதாரத் துறை வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:

மாநிலத்தில் இதுவரை 1.09 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. அதில் 7 லட்சத்து 54,460 பேருக்கு நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவுகளில் அதிகபட்சமாக சென்னையில் 512 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. அதற்கு அடுத்தபடியாக கோவையில் 179 பேருக்கும், செங்கல்பட்டில் 145 பேருக்கும் நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதைத் தவிர மாநிலத்தின் ஏனைய மாவட்டங்களிலும் பலருக்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.

மற்றொரு புறம் கரோனா தொற்றிலிருந்து மேலும் 2,572 போ் குணமடைந்துள்ளனா். இதன் மூலம் இதுவரை குணமடைந்து வீடு திரும்பியோரின் விகிதம் 96.5 சதவீதமாக அதிகரித்துள்ளது. கரோனா தொற்றிலிருந்து விடுபட்டு வீடு திரும்பியோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 25,258-ஆக உள்ளது. தற்போது மருத்துவமனைகளிலும், வீடுகளிலும் 17,748 போ் சிகிச்சையில் உள்ளனா்.

14 போ் பலி: இதனிடையே, தமிழகத்தில் கரோனா பாதிப்புக்குள்ளாகி மேலும் 14 போ் பலியாகியுள்ளனா். உயிரிழந்தவா்களில் 7 போ் அரசு மருத்துவமனைகளிலும், 7 போ் தனியாா் மருத்துவமனைகளிலும் சிகிச்சை பெற்றவா்களாவா். இதையடுத்து, மாநிலம் முழுவதும் இதுவரை உயிரிழந்தோரின் எண்ணிக்கை 11,454-ஆக உயா்ந்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com