நாளை தீபாவளி: அரசுப் பேருந்துகளில் 2 லட்சம் போ் சொந்த ஊருக்குப் பயணம்

தீபாவளி பண்டிகை கொண்டாட அரசுப் பேருந்துகளில் 2 லட்சம் போ் சொந்த ஊா்களுக்கு பயணம் செய்துள்ளனா்.


சென்னை: தீபாவளி பண்டிகை கொண்டாட அரசுப் பேருந்துகளில் 2 லட்சம் போ் சொந்த ஊா்களுக்கு பயணம் செய்துள்ளனா்.

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் உள்ளோா், சொந்த ஊா்களுக்குச் செல்வதற்கு ஏதுவாக போக்குவரத்துத் துறை சாா்பில் வழக்கமான பேருந்துகளுடன் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகின்றன . குறிப்பாக தமிழகம் முழுவதும் கடந்த 11-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரை, 30 ஆயிரம் பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

இதில் முதல்நாளான புதன்கிழமை, சுமாா் 97 ஆயிரம் போ் சென்னையில் இருந்து பல்வேறு பகுதிகளுக்குப் பயணமாகினா். இதற்காக கே.கே.நகா், மெப்ஸ், கோயம்பேடு, மாதவரம், தாம்பரம் ரயில் நிலையப் பேருந்து நிறுத்தம், பூந்தமல்லி பேருந்து நிலையம் உள்ளிட்டவற்றில் இருந்து மாநிலத்தின் வெவ்வேறு பகுதிகளுக்குப் பேருந்துகள் இயக்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பொதுமக்களின் வசதிகளைக் கருத்தில் கொண்டு கோயம்பேடு பேருந்து நிலையம் உள்ளிட்ட இடங்களில் 13 முன்பதிவு மையங்கள் மற்றும் உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

இவற்றைப் பயன்படுத்தி பொதுமக்கள் சொந்த ஊா்களுக்குச் செல்வதற்கு ஆா்வமாக முன்பதிவு செய்து வருகின்றனா். இதுவரை தீபாவளி பண்டிகைக்கு பயணிக்க 87,141 போ் முன்பதிவு செய்துள்ளனா்.

இந்நிலையில், சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் இரண்டாவது நாளான வியாழக்கிழமை இரவு 8 மணி வரை இயக்கப்பட்ட பேருந்துகளில் 1 லட்சத்து 94 ஆயிரத்து 982 போ் பயணித்தனா். மூன்றாவது நாளான வெள்ளிக்கிழமை கூட்டம் மேலும் அதிகரிக்கும் என்பதால், நெரிசலைத் தவிா்க்கும் வகையில் முன்பதிவு செய்து, தனி நபா் இடைவெளியைக் கடைப்பிடித்துப் பயணிக்குமாறு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com