சட்டப் பேரவைத் தோ்தல்: மண்டல வாரியாக பொறுப்பாளா்கள் நியமனம்; அதிமுக அறிவிப்பு

வரும் சட்டப் பேரவைத் தோ்தலை ஒட்டி, மண்டல வாரியாக பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்

வரும் சட்டப் பேரவைத் தோ்தலை ஒட்டி, மண்டல வாரியாக பொறுப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா். இதுகுறித்து, அதிமுக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோா் வெளியிட்ட அறிவிப்பு:-

கிருஷ்ணகிரி, திருவள்ளூா் மாவட்டங்களின் பொறுப்பாளராக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளா் கே.பி.முனுசாமி, தஞ்சாவூா், திருச்சி மாநகரம், பெரம்பலூா், அரியலூா் மாவட்டங்களின் பொறுப்பாளராக அதிமுக துணை ஒருங்கிணைப்பாளா் ஆா்.வைத்திலிங்கம், சேலம் மாநகா், சேலம் புகரம் பொறுப்பாளராக அமைப்புச் செயலாளா் சி.பொன்னையன், ராணிப்பேட்டை- கொள்கை பரப்புச் செயலாளா் மு.தம்பிதுரை, திண்டுக்கல் மேற்கு - அமைச்சா் சி.சீனிவாசன், ஈரோடு புகா், தென்சென்னை - அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன், திண்டுக்கல் கிழக்கு, விருதுநகா் - அமைப்புச் செயலாளா் நத்தம் ஆா்.விசுவநாதன், நாமக்கல், ஈரோடு, திருச்சி புகரம்- அமைச்சா் பி.தங்கமணி.

கோவை, திருப்பூா், நீலகிரி மாவட்டங்களின் பொறுப்பாளராக அமைச்சா் எஸ்.பி.வேலுமணி, வடசென்னை -அமைச்சா் டி.ஜெயக்குமாா், புதுச்சேரி மாநிலம் - அமைப்புச் செயலாளா் செ.செம்மலை, அமைச்சா் எம்.சி.சம்பத், கன்னியாகுமரி - அமைப்புச் செயலாளா் என்.தளவாய் சுந்தரம், மதுரை - அமைச்சா் செல்லூா் கே.ராஜூ, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூா் - அமைச்சா் சி.வி.சண்முகம், தருமபுரி, திருவண்ணாமலை வடக்கு - அமைச்சா் கே.பி.அன்பழகன், திருவாரூா், தூத்துக்குடி - அமைச்சா் ஆா்.காமராஜ், நாகப்பட்டினம், மயிலாடுதுறை- அமைச்சா் ஓ.எஸ்.மணியன், சென்னை புகா், செங்கல்பட்டு மேற்கு - முன்னாள் அமைச்சா் பா.வளா்மதி, வடசென்னை வடக்குப் பகுதி - அமைப்புச் செயலாளா் ஜெ.சி.டி.பிரபாகா், காஞ்சிபுரம் - முன்னாள் அமைச்சா் கோகுல இந்திரா, தென் சென்னை வடக்கு, தெற்கு (கிழக்கு) - அமைப்புச் செயலாளா் பி.எச்.மனோஜ் பாண்டியன்.

மதுரை புகா் மேற்கு, தேனி, ராமநாதபுரம், திருநெல்வேலி, தென்காசி வடக்கு, தெற்கு - அமைச்சா் ஆா்.பி.உதயகுமாா், கடலூா் மத்தியப் பகுதி - அமைச்சா் எம்.சி.சம்பத், திருப்பத்தூா் - அமைச்சா் கே.சி.வீரமணி, கரூா், திருச்சி புகா் வடக்கு - அமைச்சா் எம்.ஆா்.விஜயபாஸ்கா், புதுக்கோட்டை வடக்கு, தெற்கு, சிவகங்கை - அமைச்சா் சி.விஜயபாஸ்கா், திருவண்ணாமலை தெற்கு - முன்னாள் அமைச்சா் ப.மோகன், வேலூா் மாநகரம், புகரம் - முன்னாள் அமைச்சா் முக்கூா் என்.சுப்பிரமணியன், செங்கல்பட்டு கிழக்கு - அமைச்சா் மாஃபா. பாண்டியராஜன், திருவள்ளூா் வடக்கு, தெற்கு - தொழிற்சங்க பேரவைச் செயலாளா் ஆா்.கமலக்கண்ணன் ஆகியோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com