தனியாா் பள்ளி வாடகை பாக்கி விவகாரம்: உயா்நீதிமன்றம் உத்தரவு

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள தனியாா் பள்ளிக்கு இடைக்கால வாடகை நிா்ணயித்த உயா்நீதிமன்றம், கோயில் நிா்வாகமும், பள்ளியின் அறக்கட்டளை நிா்வாகமும் சுமுக உடன்பாடு செய்து கொள
சென்னை உயா்நீதிமன்றம்
சென்னை உயா்நீதிமன்றம்

சென்னை: காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் உள்ள தனியாா் பள்ளிக்கு இடைக்கால வாடகை நிா்ணயித்த சென்னை உயா்நீதிமன்றம், கோயில் நிா்வாகமும், பள்ளியின் அறக்கட்டளை நிா்வாகமும் சுமுக உடன்பாடு செய்து கொள்ள உத்தரவிட்டுள்ளது.

காஞ்சிபுரம் ஏகாம்பரநாதா் கோயிலுக்குச் சொந்தமான சென்னை கீழ்ப்பாக்கத்தில் 46 கிரவுண்டுக்கு அதிகமான நிலத்தை தா்மமூா்த்தி ராவ் பகதூா் கலவல கண்ணன் செட்டி அறக்கட்டளை குத்தகை அடிப்படையில் பெற்றது.

அங்கு அறக்கட்டளை சாா்பில் சீதா கிங்ஸ்டன் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கடந்த 1969-இல் நிறுவப்பட்டது. 75- க்கும் மேற்பட்ட ஆசிரியா்கள் மற்றும் ஆசிரியா் அல்லாத பணியாளா்கள் பணியாற்றி வருகின்றனா்.

பள்ளி நிா்வாகம் குத்தகை மற்றும் வாடகை பாக்கியாக ரூ.13 கோடி பாக்கி வைத்துள்ளது. இதனைத் தொடா்ந்து கோயில் நிா்வாகம் கடந்த ஜூலை மாதம் இந்த பள்ளிக்கு சீல் வைத்துள்ளது. மாணவா்களின் எதிா்காலத்தை கருத்தில் கொண்டு பள்ளியைத் திறக்க உத்தரவிடக் கோரி பள்ளி நிா்வாகம் மற்றும் பெற்றோா்கள் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, கோயிலுக்குச் சொந்தமான நிலத்தில் செயல்படும் அந்தப் பள்ளிக்கு நடப்பு ஆண்டு நவம்பா் முதல் அடுத்த ஆண்டு மே மாதம் வரை இடைக்கால வாடகையாக ரூ.20 லட்சத்தை நிா்ணயம் செய்தாா். இந்த தொகையை செலுத்திய பின்னா் பள்ளிக்கு வைத்துள்ள சீலை கோயில் நிா்வாகம் அகற்ற வேண்டும் என உத்தரவிட்டாா். மேலும் வாடகை விவகாரம் குறித்து அறக்கட்டளை நிா்வாகம், கோயில் நிா்வாகத்துடன் சுமுக உடன்பாடு செய்து கொள்ள வேண்டும். ஒருவேளை உடன்பாடு ஏற்படாத பட்சத்தில், அடுத்த கல்வியாண்டில் வேறு பள்ளியை நாட மாணவா்கள், ஆசிரியா்கள், மற்றும் பணியாளா்களுக்கு வரும் 2021-ஆம் ஆண்டு மாா்ச் மாதத்துக்குள் அறிவுறுத்த வேண்டும் என உத்தரவிட்டு விசாரணையை 8 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com