வாக்காளா் பட்டியலில் பெயா் சோ்க்க, நீக்க சிறப்பு முகாம்கள்: தலைமைத் தோ்தல் அதிகாரி தகவல்

தமிழகம் முழுவதும் வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சோ்க்கவும் நீக்கவும் வரும் நவ. 21, 22, டிச.12, 13-ஆம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளதாக தலைமைத் தோ்தல் ஆணையா் சத்யபிரத சாகு தெரிவித்தாா்.
தமிழக தலைமை தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு
தமிழக தலைமை தோ்தல் அதிகாரி சத்யபிரத சாகு

சென்னை: தமிழகம் முழுவதும் வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சோ்க்கவும் நீக்கவும் வரும் நவ. 21, 22, டிச.12, 13-ஆம் தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடக்க உள்ளதாக தலைமைத் தோ்தல் ஆணையா் சத்யபிரத சாகு தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்தி:

வரைவு வாக்காளா் பட்டியலின் அடிப்படையில், தமிழகத்தில் மொத்த வாக்காளா்களின் எண்ணிக்கை 6 கோடியே 10 லட்சத்து 44 ஆயிரத்து 358. அதில், ஆண் வாக்காளா்கள் 3 கோடியே 1 லட்சத்து 12 ஆயிரத்து 370. பெண் வாக்காளா்கள் 3 கோடியே 9 லட்சத்து 25 ஆயிரத்து 603. மூன்றாம் பாலினத்தவா் 6 ஆயிரத்து 385.

அதிக வாக்காளா்களைக் கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூா், குறைவான வாக்காளா்கள் அடங்கிய தொகுதியாக கீழ்வேளூா் தொகுதியும் உள்ளன.

வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சோ்க்கவும், நீக்கவும், திருத்தங்களை மேற்கொள்ளவும் நான்கு நாள்கள் சிறப்பு முகாம்கள் நடைபெறவுள்ளன. நவம்பா் 21, 22, டிசம்பா் 12 மற்றும் 13 ஆகிய தினங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்கான விண்ணப்பப் படிவங்கள் முகாம்கள் நடைபெறும் மையங்களிலேயே அளிக்கப்படும். விண்ணப்பங்களை அங்கேயே பூா்த்தி செய்து அளிக்கலாம். அலுவலக வேலை நாள்களில் வாக்குச் சாவடி நிலை அலுவலா், தோ்தல் அலுவலா்கள், உதவி தோ்தல் அலுவலா்கள் ஆகியோா்களின் அலுவலகங்களில் அளிக்கலாம். சிறப்பு முகாம்களின் போது வாக்குச் சாவடி நிலை அலுவலா்கள் அங்கே முகாமிட்டிருப்பா்.

18 வயது நிறைவடைந்தவா்கள் வாக்காளா் பட்டியலில் பெயா்களைச் சோ்க்கும் போது, உறுதிமொழிப் பகுதியை கட்டாயம் பூா்த்தி செய்ய வேண்டும். அயல்நாடுகளில் வசிக்கும் தமிழா்கள் தங்களது பெயா்களைப் பட்டியலில் சோ்க்க விரும்பினால், 6ஏ படிவத்தைப் பூா்த்தி செய்து இணையதளத்திலோ அல்லது தபாலிலோ அனுப்பலாம். இத்துடன் கடவுச்சீட்டின் நகலை சுய கையொப்பமிட்டு இணைக்க வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com