மேற்குத் தொடர்ச்சி மலையில் தொடர் கன மழை: கடனாநதி, ராமநதி அணைகள் நிரம்பின

மேற்குத் தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் 3-ஆவது நாளாக பெய்த தொடர் கன மழையால் கடனாநதி அணை, ராமநதி அணைகள் நிரம்பியதையடுத்து அணைகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.
கடனாநதி அணை நிரம்பியதையடுத்து உபரி நீர் வழிந்தோடி வழியாக வெளியேற்றப்படுகிறது.
கடனாநதி அணை நிரம்பியதையடுத்து உபரி நீர் வழிந்தோடி வழியாக வெளியேற்றப்படுகிறது.

அம்பாசமுத்திரம்: மேற்குத் தொடர்ச்சி மலை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் 3-ஆவது நாளாக பெய்த தொடர் கன மழையால் கடனாநதி அணை, ராமநதி அணைகள் நிரம்பியதையடுத்து அணைகளிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது.

தமிழகத்தில் வடகிழக்குப் பருவமழை அக்.28 ஆம் தொடங்கிய நிலையில் நவ. 15 முதல் பரவலாக தொடர் கன மழை பெய்து வருகிறது. தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களில் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மூன்று நாள்களாக தொடர்ந்து மழை பெய்து வருவதையடுத்து அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. 

இதையடுத்து தென்காசி மாவட்டத்தில் கடனாநதி அணை நிகழாண்டு 2ஆவது முறையாகவும், ராமநதி அணை 3ஆவது முறையாகவும் முழுக் கொள்ளளவை எட்டின. 

ராமநதி அணை நிரம்பியதையடுத்து வழிந்தோடி வழியாக உபரிநீர் வெளியேற்றப்படுகிறது.

புதன்கிழமை காலை நிலவரப்படி, பாபநாசம் அணையில் நீர்மட்டம் 6 அடி உயர்ந்து 117.20 அடியாகவும், அணையில் நீர்வரத்து 6813.45 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 359.75 கன அடியாகவும் உள்ளது. சேர்வலாறு அணையில் நீர்மட்டம் 135.69 அடியாக இருந்தது. மணிமுத்தாறு அணையில் நீர்மட்டம் 3 அடி உயர்ந்து 89.50 அடியாகவும், நீர்வரத்து 2992 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 25 கன அடியாகவும் இருந்தது. வடக்குப் பச்சையாறு அணையில் நீர்மட்டம் 13 அடியாகவும், நீர்வரத்து 33.55 அடியாகவும் இருந்தது.  நம்பியாறு அணையில் நீர்மட்டம் 9.35 அடியாகவும், நீர்வரத்து 7.52 கன அடியாகவும் இருந்தது. கொடுமுடியாறு அணையில் நீர்மட்டம் 36 அடியாகவும், நீர்வரத்து 83 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 50 கன அடியாகவும் இருந்தது.

தென்காசி மாவட்டத்தில் உள்ள அணைகளில் கடனாநதி அணை நிகழாண்டு 2ஆவது முறையாக நிரம்பியது. செவ்வாய்கிழமை இரவு அணைக்கு நீர்வரத்து அதிகரித்ததையடுத்து 1,145 கன அடி உபரி நீர் வழிந்தோடி வழியாக திறந்துவிடப்பட்டது. அணையின் நீர்மட்டம் 83 அடியாகவும், நீர்வரத்து 1387 கன அடியாகவும் வெளியேற்றம் 1145 கன அடியாகவும் இருந்தது. ராமநதி அணை நிகழாண்டு மூன்றாவது முறையாக நிரம்பியதையடுத்து அணையிலிருந்து உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. அணையில் நீர்மட்டம் 82 அடியாகவும், அணைக்கு நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் 180 கன அடியாகவும் இருந்தது. கருப்பாநதி அணையில் நீர்மட்டம் 69.59 அடியாகவும், நீர்வரத்து 403 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 40 கன அடியாகவும் இருந்தது. குண்டாறு அணை முழுக்கொள்ளளவான 36.10 கன அடியை எட்டியதை அடுத்து அணையில் நீர்வரத்து மற்றும் வெளியேற்றம் 135 கன அடியாக இருந்தது. அடவிநயினார் அணையில் நீர்மட்டம் 101.50 அடியாகவும், நீர்வரத்து 140 கன அடியாகவும், நீர் வெளியேற்றம் 30 கன அடியாகவும் இருந்தது. 

மழையளவு (மி.மீட்டரில்) :
திருநெல்வேலி மாவட்டம் பாபநாசம் 117, சேர்வலாறு 106, மணிமுத்தாறு 65, நம்பியாறு 26, கொடுமுடியாறு 60, அம்பாசமுத்திரம் 80.40, சேரன்மகாதேவி 68, ராதாபுரம் 34, நாங்குநேரி 43, பாளையங்கோட்டை 46, திருநெல்வேலி 42.

தென்காசி மாவட்டத்தில் மழையளவு: 
கடனாநதி 73, ராமநதி 95, கருப்பா நதி 62, குண்டாறு 99, அடவி நயினார் 58, ஆய்குடி 60.06, சங்கரன்கோவில் 48, செங்கோட்டை 71, சிவகிரி 81, தென்காசி 72.40.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com