மந்தகதியில் நடைபெறும் ஆரணி ஆற்று மேம்பாலப் பணி

ஆரணி ஆற்றின் குறுக்கே 4 ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட மேம்பாலப் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருவதால் மழை தொடங்குவதற்கு முன் பணிகளை விரைந்து முடிக்கப் பொதுமக்கள் கோரிக்கை.
மந்தகதியில் நடைபெறும் ஆரணி ஆற்று மேம்பாலப் பணி
மந்தகதியில் நடைபெறும் ஆரணி ஆற்று மேம்பாலப் பணி

ஆரணி ஆற்றின் குறுக்கே 30 கோடி ரூபாய் செலவில் நான்கு ஆண்டுகளுக்கு முன் தொடங்கப்பட்ட மேம்பாலப் பணிகள் மந்தகதியில் நடைபெற்று வருவதால் மழை தொடங்குவதற்கு முன் பணிகளை விரைந்து முடிக்கப் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். 

திருவள்ளூர் மாவட்டம் ஊற்றுக்கோட்டைப் பகுதியில் உள்ள ஆரணி ஆற்றின் குறுக்கே ஊற்றுக்கோட்டைப் பகுதியையும் திருவள்ளூர் பகுதியையும் இணைக்கும் வகையில் மேம்பாலம் கட்டித் தரக்கோரிப் பல வருட போராட்டங்களுக்குப் பின்பு கடந்த 2017-ஆம் ஆண்டு 30 கோடி ரூபாய் செலவில் மேம்பாலம் கட்டுவதற்கான பணிகள் தொடங்கப்பட்டது. 

தற்போது நான்கு வருடங்கள் முடிந்து பின்பும் பணிகள் முழுவதும் முடிவடையாமலும் மக்கள் பயன்பாட்டிற்கு வராமலும் மந்தகதியில் பணிகள் நடைபெற்று வருகின்றது. மேலும் தற்போது மழை பெய்து வருவதால் விரைந்து மேம்பாலப் பணிகளை முடிக்கவும் மழைக்காலங்களில் மேம்பாலத்திற்குக் கீழ் ஆரணி ஆற்றில் தண்ணீர் செல்ல வாய்ப்பு இருப்பதால் மாற்று வழியாக தற்போது பயன்படுத்தி வரும் வழி துண்டிக்கப்பட்டு ஊத்துக்கோட்டை திருவள்ளூர் பகுதிக்குப் போக்குவரத்து முற்றிலும் முடக்கப்படும் நிலை ஏற்படும் முன் மேம்பாலப் பணிகளை விரைந்து முடித்து மக்களின் பயன்பாட்டிற்குக் கொண்டுவர வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

நான்கு வருடங்களாக நடைபெற்று வரும் பணி விரைந்து முடிக்கவும் இதுகுறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் கேட்டபோது 75 சதவீத பணிகள் முடிவடைந்து உள்ளதாகவும் இன்னும் ஒரு வருடத்திற்குள் மீதமுள்ள பணிகள் முடிவடையும் எனவும் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com