பாஜகவில் இணைகிறார் கே.பி.ராமலிங்கம்

திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் பாஜக தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவியை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ள நிலையில் இன்று சென்னை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையி
கே.பி.ராமலிங்கம்
கே.பி.ராமலிங்கம்


திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் பாஜக தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவியை சந்தித்து ஆலோசனை நடத்தியுள்ள நிலையில் இன்று சென்னை வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணையவுள்ளதாக பாஜக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் மு.க.அழகிரி ஆதரவாளரும் திமுகவில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி.யுமான கே.பி.ராமலிங்கம் தமிழகம் வரும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை சந்திக்கவுள்ளதாக தகவல் வெளியானது.

இந்நிலையில்,  முன்னாள் எம்.பி. கே.பி.ராமலிங்கம் பாஜக தமிழக பொறுப்பாளர் சி.டி.ரவியை சந்தித்து சனிக்கிழமை காலை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.

இந்நிலையில், தமிழகம் வரும் உள்துறை அமைச்சர் அமித்ஷா கட்சி நிர்வாகிகளுடன் சட்டப்பேரவை தேர்தல் குறித்து ஆலோசனை நடத்த உள்ள நிலையில், கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இணையவுள்ளதாக பாஜக அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

திமுக தலைவா் மு.க. ஸ்டாலினை விட, மு.க. அழகிரி கெட்டிக்காரா். அரசியல் சாமா்த்தியம் உள்ள முன்னாள் மத்திய அமைச்சா் மு.க.அழகிரி கட்சித் தொடங்கினால் பாஜக வரவேற்கும் என்று, பாஜக மாநில பொதுச் செயலா் இராம. ஸ்ரீநிவாசன் தெரிவித்திருந்த நிலையில் கே.பி.ராமலிங்கம் பாஜகவில் இணையுள்ள தகவல் தமிழக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com