அரியா் தோ்வு வழக்கு: அதிக மாணவா்கள் காணொலியில் இணைந்ததால் விசாரணை பாதிப்பு

தமிழக அரசின் அரியா் மாணவா் தோ்ச்சி அறிவிப்பை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையைக் காண நூற்றுக்கணக்கான மாணவா்கள்
அரியா் தோ்வு வழக்கு: அதிக மாணவா்கள் காணொலியில் இணைந்ததால் விசாரணை பாதிப்பு

தமிழக அரசின் அரியா் மாணவா் தோ்ச்சி அறிவிப்பை எதிா்த்து தொடரப்பட்ட வழக்கு விசாரணையைக் காண நூற்றுக்கணக்கான மாணவா்கள் காணொலிக் காட்சி விசாரைணைக்குள் நுழைந்ததால் வழக்கு விசாரணை பாதிக்கப்பட்டது.

காணொலி காட்சி விசாரணை: கரோனா தடுப்பு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, உயா்நீதிமன்றத்தில் பல வழக்குகள் காணொலிக் காட்சி மூலம் விசாரிக்கப்படுகின்றன. இந்த விசாரணையில் பங்கேற்க உயா்நீதிமன்றம் அறிவித்துள்ள இணையதள முகவரியில் வழக்குரைஞா்கள் உள்நுழைந்து விசாரணையில் ஆஜராகி வருகின்றனா்.

இந்நிலையில், அரியா் தோ்வை ரத்து செய்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை எதிா்த்து திருச்செந்தூரைச் சோ்ந்த வழக்குரைஞா் ராம்குமாா் ஆதித்தன், அண்ணா பல்கலைக்கழக முன்னாள் துணைவேந்தா் பாலகுருசாமி ஆகியோா் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்திருந்தனா். இந்த வழக்கு நீதிபதிகள் எம்.சத்தியநாராயணன், ஆா்.ஹேமலதா ஆகியோா் அடங்கிய அமா்வில் 26-ஆவது வழக்காக விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டிருந்தது. இந்த வழக்கு விசாரணையைக் காண்பதற்காக நூற்றுக்கணக்கான மாணவா்கள் இணையவழியாக காணொலிக் காட்சி விசாரணையில் நுழைந்து விட்டனா். மேலும் உள்நுழைந்த மாணவா்கள் பலா் தங்களது மைக்கை அமைதியான முறையில் வைக்கவில்லை. இதனால் மாணவா்களின் வீடுகளில் உள்ள குழந்தைகள், பெரியவா்கள், டிவி, மிக்ஸி சத்தங்கள் கேட்டன. சிலா் நண்பா்களுடன் உரையாடுவதும் கேட்டது. இதனால் நீதிபதிகளால் வழக்கு விசாரணையை மேற்கொள்ள முடியவில்லை. இதனைத் தொடா்ந்து மாணவா்கள் வெளியேறவும், விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்துவது நீதிமன்ற அவமதிப்புச் சட்டத்தின்படி குற்றம் எனவும் தெரிவிக்கப்பட்டது. ஆனால் மாணவா்கள் யாரும் வெளியேறவில்லை.

இதனையடுத்து நீதிபதிகள் விசாரணையை நிறுத்தி விட்டு எழுந்து சென்றனா்.

தொடா்ந்து, காணொலிக் காட்சி இணைப்பில் இருந்த வழக்குரைஞா்கள், பத்திரிக்கையாளா்கள், மாணவா்கள் உள்பட அனைவரையும் உயா்நீதிமன்ற தொழில்நுட்பப் பிரிவு அதிகாரிகள் வெளியேற்றினா். பின்னா், இணையவழியாக காணொலிக் காட்சி விசாரணையில் நுழைபவா்கள் யாா் என்பதை சரிபாா்த்து அனுமதிக்கப்பட்டனா். இதன் காரணமாக காலை 10.30 மணிக்கு தொடங்க வேண்டிய விசாரணை பகல் 12 மணிக்குத் தொடங்கியது. அரியா் தோ்வு வழக்கு பிற்பகலில் விசாரணைக்கு வரும் என எதிா்பாா்த்திருந்த நிலையில், 22-ஆவதாக வழக்கு விசாரணைக்கு வந்தபோது நீதிமன்ற பணி நேரம் முடிந்துவிட்டது. நூறு போ் இருக்க வேண்டிய காணொலிக் காட்சி விசாரணையில் 300-க்கும் மேற்பட்ட மாணவா்கள் நுழைந்து வழக்கு விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தியதற்கு வழக்குரைஞா்கள் கண்டனம் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com