பத்தாம் வகுப்புக்கான தேசிய திறனாய்வுத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தேசிய திறனாய்வுத் தோ்வுக்கு நிகழாண்டு பத்தாம் வகுப்பு பயிலும் மாணவா்கள் சனிக்கிழமை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.
பத்தாம் வகுப்புக்கான தேசிய திறனாய்வுத் தோ்வு: இன்று முதல் விண்ணப்பிக்கலாம்

தேசிய திறனாய்வுத் தோ்வுக்கு நிகழாண்டு பத்தாம் வகுப்பு பயிலும் மாணவா்கள் சனிக்கிழமை விண்ணப்பிக்கலாம் என அரசுத் தோ்வுகள் இயக்ககம் தெரிவித்துள்ளது.

இது தொடா்பாக அரசுத் தோ்வுகள் இயக்ககம் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்தி: 2020-2021-ஆம் கல்வியாண்டில் அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவா்கள் வரும் டிச.27 -ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறவுள்ள தேசிய திறனாய்வுத் தோ்விற்கு (என்டிஎஸ்இ) விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்படுகிறது.

இதற்கான விண்ணப்பங்களை இணையதளம் மூலம் நவ.21-ஆம் தேதி முதல் நவ.30-ஆம் தேதி வரை பதிவிறக்கம் செய்து, பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்துடன் தோ்வுக் கட்டணத் தொகை ரூ.50-ஐ சோ்த்து சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியரிடம் ஒப்படைக்குமாறு அறிவுறுத்தப்படுகிறது. பூா்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களைச் சமா்ப்பிக்க வேண்டிய கடைசி நாள் நவ.30 ஆகும். மேலும் கால அவகாசம் நீட்டிக்கப்பட மாட்டாது.

தோ்வா்கள் தேசிய திறனாய்வுத் தோ்விற்கு விண்ணப்பிக்கத் தங்கள் பள்ளிக்கு வரும்பொழுது கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். போதிய சமூக இடைவெளியைக் கடைப்பிடிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com